பன்னாட்டு சங்கம் தொடக்கம் | Pannattu Sangam Thodakkam in Tamil

Advertisement

பன்னாட்டு சங்கம் | Pannattu Sangam in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பன்னாட்டு சங்கம் பற்றிய சிறு குறிப்பை தெரிந்து கொள்ளலாம். இந்த சங்கம் பற்றி நாம் பள்ளியில் படிக்கும் போது சமூக அறிவியல் பாடத்தில் படித்திருப்போம். பன்னாட்டு சங்கம் முதல் உலகப்போருக்கு பின்னர் தொடங்கப்பட்டது. இந்த தொகுப்பில் பன்னாட்டு சங்கம் எப்போது தொடங்கப்பட்டது மற்றும் உருவாக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதையெல்லாம் விரிவாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

பன்னாட்டு சங்கம் தோற்றம்:

  • பன்னாட்டு கழகம் 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தில் 5 உறுப்புகள் கொண்டதாக இருக்கிறது. அவை பொதுச்சபை, செயற்குழு, செயலகம், பன்னாட்டு நீதிமன்றம், பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்புபோன்றவை இருக்கிறது.

பன்னாட்டு சங்கத்தின் செயலகம் அமைந்துள்ள இடம்:

  • இந்த கழகத்தின் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் ஜெனிவாவில் அமைந்துள்ளது.
  • 28-ம் தேதி செப்டம்பர் மாதம் 1934-ம் ஆண்டு முதல் 23-ம் தேதி பிப்ரவரி மாதம் 1935-ம் ஆண்டு வரை பன்னாட்டு சங்கம் 58 உறுப்பினர்களை கொண்டிருந்தது.
  • இதை தொடங்குவதற்கு முதல் முயற்சி எடுத்தவர் உட்ரோ வில்சன் ஆவார். இந்த அமைப்பின் பொது‌ச் செயலராக ‌பி‌ரி‌ட்ட‌ன் நா‌‌ட்டினை சா‌ர்‌ந்த சர் எரிக் டிரம்மண்ட் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.
  • பன்னாட்டு சங்கம் 5 உறுப்புகளைக் கொண்டது. அவை செயலகம், நிர்வாக சபை, பன்னாட்டுத் தொழிலாளர் சங்கம், பன்னாட்டு நீதிமன்றம், பொது அவை.

பன்னாட்டு சங்கத்தின் குறிக்கோள்கள்:

  • இந்த சங்கம் உருவாக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கமே போர்களை தவிர்த்து அமைதியை நிலைநாட்டுவது.
  • சமூகப் பொருளாதார விசயங்களில் பன்னாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்பனவாகும். மேலும் தொழிலார்களின் நலன், உரிமை பாதுகாப்பு, போதை மருந்துகளை தடுத்தல் போன்றவையாகும்.
  • இ‌த்தா‌லி, ஜெ‌ர்ம‌னி, ஜ‌ப்பா‌ன் முத‌லிய ச‌ர்வா‌திகார நாடுக‌ள் ப‌ன்னா‌ட்டு ச‌ங்க‌த்‌தி‌ன் க‌ட்டளையை ஏ‌ற்க மறு‌த்தது.
  • பின்லாந்தை தாக்கியதற்காக ரஸ்யாவை வெளியேற்றுவதாக இருந்தது. அதன்படி  1939‌-ல் ர‌ஷ்யா‌வினை ச‌ங்க‌‌த்‌தினை ‌வி‌ட்டு வெ‌ளியே‌ற்‌றியது.
  • ஒரு சில காரணங்களால் பன்னாட்டு சங்கம் 1946-ம் ஆண்டு கலைக்கப்பட்டது.

பன்னாட்டு சங்கத்தின் பணிகள் யாவை?

  • பின்லாந்தின் மேற்குக்கடற்கரைக்கும் சுவீடனின் கிழக்குக்கடற்கரைக்கும் இடையில் அமைந்திருந்த ஆலேண்டு தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதில் பின்லாந்திற்கும் சுவீடனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதை தீர்த்து வைத்தது.
  • போலந்திற்கும், ஜெர்மனிக்கும் இடையே மேலை சைலேஷியா பகுதியில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்ட போது அப்பிரச்சனையைச் சங்கம் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தது.
  • கிரீஸ் பல்கேரியாவின் மீது படையெடுத்த போது பன்னாட்டுச் சங்கம் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டது.
  • விசாரணைக்குப்பின் சங்கம் கிரீஸின் மீது குற்றஞ்சாட்டி, கிரீஸ் போர் இழப்பீடு வழங்க வேண்டுமெனத் தீர்மானித்தது.
  • 1925-ல் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்தாகின்ற வரை பன்னாட்டுச் சங்கம் வெற்றிகரமாகவே செயலாற்றியது.
  • 1932 பிப்ரவரியில் தான் கூடியது. இம்மாநாட்டில் பிரான்சுக்கு நிகராகத் தானும் ஆயுதங்களை வைத்துக்கொள்ள ஜெர்மனி அனுமதி கேட்ட போது மறுக்கப்பட்டது. அக்டோபர் திங்களில் ஹிட்லர் ஜெர்மனியை மாநாட்டிலிருந்தும் பன்னாட்டுச் சங்கத்திலிருந்தும் விலக்கிக்கொண்டார். 1931ம் ஆண்டு ஜப்பான் மஞ்சூரியாவைத் தாக்கியது.
  • லொக்கார்னோ உடன்படிக்கையின் படி ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் மேற்கு ஐரோப்பாவில் பரஸ்பரம் அமைதிக்கு உத்தரவாதமளித்தன.
  • ஜெர்மனி பன்னாட்டுச் சங்கத்தில் இணைந்தது. பாதுகாப்புக் குழுவிலும் நிரந்தர இடம் அளிக்கப்பட்டது

தோல்விக்கான காரணம்:

  • இந்த சங்கத்திற்கென்று தனி ராணுவப்படை இல்லை என்பதால் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
  • மேலும் முதல் உலகப்போரில் வெற்றி பெற்ற நாடுகளின் அமைப்பாகவே காணப்பட்டது.
அலகிட்டு வாய்பாடு 10th திருக்குறள்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement