தமிழ் வழி English Grammar கற்றுக்கொள்ளலாம் வாங்க..!

Advertisement

English Grammar Through Tamil

வணக்கம்.. இன்று நாம் என்ன தெரிந்துகொள்ள போகிறோம் என்று மேல் தலைப்பை படித்த போதே தெரிந்திருக்கும் என்ன பதிவு என்று.. ஆம் இன்று நாம் தமிழ் வழியில் English Grammar பற்றி பார்க்க போகிறோம். நாம் ஆங்கிலம் சரளமாக பிழையில்லாமல் எழுதுவதற்கும், படித்து புரிந்துகொள்வதற்கும் Grammar மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆக நம் தாய் மொழி தமிழ் என்பதால் நமது தமிழ் மொழி வழியாகவே நாம் இன்று அடிப்படை English Grammar-ஐ படித்தறிய போகிறோம். இது கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Parts of Speech in Tamil

English Grammar:

ஒரு வாக்கியத்தில் (sentence) நிறைய வார்த்தைகள் இருக்கும். அந்த வார்த்தைகளை நாம் பலவகைகளாக பிரிக்கலாம். ஆங்கிலத்தில் ஒவ்வொரு வார்த்தைகளையும் நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான், அது என்ன வகையான வார்த்தை என்பதை நாம் அழைக்கப்போகிறோம் இதனை parts of speech என்று அழைப்பார்கள். இதனை நாம் ஒரு உதாரணத்துடன் பார்க்கலாம் வாங்க.

உதாரணம்: 1

Ramya is a Girl. (ரம்யா ஒரு பெண்)

இவற்றில் எத்தனை வார்த்தைகள் இருக்கிறது என்றால் 4 வார்த்தைகள் உள்ளது. அந்த 4 வார்த்தைக்கு உள்ள அர்த்தம் என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

  • Ramya – என்பது ஒரு பெயரை குறிக்கிறது ஆக அது (Noun)
  • is – என்ற வார்த்தை ரம்யாவின் தன்மையை குறிக்கிறது ஆக அது (Verb)
  • a – என்பது Article 
  • Girl – என்பது பெண்ணை குறிக்கிறது ஆக அது (Noun)

உதாரணம்: 2

Ramya is an intelligent girl, she studies well. இந்த வாக்கியத்தில்

  • She – என்பது Pronoun 
  • Studies – என்பது Verb 
  • Well – என்பது Adverb 
  • intelligent – என்பது Adjective 

இப்படி ஒவ்வொரு வார்த்தையும் அதனுடைய பயன்பாட்டின் பிரகாரம் அழைக்கப்படுகிறது. ஆக Noun, Pronoun, Verb, Adverb, Adjective, Prepositions, Conjunction, Interjection இப்படி பலவகையான parts-யில் ஒரு sentence-ஐ நாம் பிறக்க முடியும். இவற்றை தான் parts of speech என்று அழைக்கப்படுகிறது. இவை இல்லாமல் Articles என்ற ஒன்று இருக்கிறது.

  • Nouns – பெயர்சொற்கள்
  • Verbs – வினைச்சொற்கள்
  • Adjectives – பெயரெச்சங்கள் / பெயருரிச்சொற்கள்
  • Adverbs – வினெயெச்சங்கள் / வினையுரிச்சொற்கள்
  • Pronouns – சுட்டுப்பெயர்ச்சொற்கள்
  • Prepositions – முன்னிடைச்சொற்கள்
  • Conjunctions – இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள்
  • Interjections – வியப்பிடைச்சொற்கள்

இவற்றின் விளக்கத்தை தனி தனியாக கற்று கொடுத்தால் தான் உங்களுக்கு புரிய வரும் ஆக Noun, Pronoun, Verb, Adverb, Adjective, Prepositions, Conjunction, Interjection & Articles விளக்கத்தை ஒரே பதிவில் உங்களுக்கு சொன்னால் கண்டிப்பாக குழப்பமாக தான் இருக்கும் ஆக அடுத்தடுத்த புதிய பதிவுகளில் உங்களுக்கு பதிவு செய்கொன்றோம் தொடர்ந்து நமது பதிவை பார்வையிடுங்கள் நன்றி வணக்கம்..

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement