வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாணவர்களுக்கான தமிழ் பொன்மொழிகள்

Updated On: October 3, 2025 6:06 PM
Follow Us:
ponmoligal in tamil for students
---Advertisement---
Advertisement

Ponmoligal in Tamil for Students

நம் முன்னோர்களின் காலத்தில் அதிகமாக படிக்காமல் கிடைத்த வேலையை செய்து சம்பாரித்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் படிக்காமல் எதுமே செய்ய முடியாது. அது போல கல்வியின் முக்கியத்துவத்தை மற்றவர்கள் சொல்லி தான் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. இதனின் முக்கியத்துவம் அனைவருக்குமே தெரியும்.

நம்முடைய பள்ளி பருவத்தில் பழமொழிகள், விடுகதைகள் போன்றவை பற்றி படித்திருப்போம். நாம் படித்த பழமொழிகளின் அர்த்தத்தை நம் வாழ்க்கையில் உணர்ந்திருப்போம். அந்த வகையில் இன்றைய பதிவில் மாணவர்களுக்கான பொன்மொழிகள் பற்றி அறிந்து கொள்வோம்.

Ponmozhigal in Tamil for Students:

கல்வியறிவு பெற்றவராக இருப்பதே ஒரு புரட்சியாளரின் முதற் கடமை. –சே குவேரா

அறிவு எப்பொழுதும் அறியாமையை ஆளும். –ஜேம்ஸ் மேடிசன்

ஆசிரியர்கள் கதவைத் திறக்கிறார்கள், ஆனால் நீங்கள்தான் உள்ளே செல்ல வேண்டும். –சீன பழமொழி

நீங்கள் நாளையே இறந்துவிடுவீர்கள் என்பது போல வாழுங்கள். நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள் என்பது போல கற்றுக்கொள்ளுங்கள். –மகாத்மா காந்தி

தோல்வியில் இருந்தே கற்றல் தொடங்குகிறது, முதல் தோல்வியே கல்வியின் ஆரம்பம். –ஜான் ஹெர்சி

கற்றறிந்தவர்களாக இருப்பது மட்டுமல்ல, நல்லொழுக்கத்துடன் இருப்பதும் மிகவும் முக்கியமானது. –ஜார்ஜ் வாஷிங்டன்

அறிவை ஞானமாக மாற்றி, ஞானம் குணத்தில் வெளிப்பட்டாலன்றி, கல்வி என்பது ஒரு வீணான செயலாகும். –சாய் பாபா

இன்றைய கல்வியானது, அன்றாட வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையோ, மனஉறுதியையோ மாணவர்களுக்கு வழங்கவில்லை. கல்வித் துறை அறியாமையின் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டது. –சாய் பாபா

வெற்றி என்பது இறுதியானதும் அல்ல, தோல்வி என்பது முடிவும் அல்ல.

நம்மால் நேற்றை சரி செய்ய முடியாது ஆனால் நாளையை சிறப்பாக உருவாக்க முடியும்.

கல்வி பற்றிய பழமொழிகள்

மாணவர்களுக்கான தமிழ் பழமொழிகள்:

நல்ல நடத்தையே கல்வியறிவு பெற்றவரின் அடையாளம். –சாய் பாபா

பத்துப் புத்தகங்களைப் படித்ததால் மட்டுமே நீங்கள் படித்தவர்கள் இல்லை. –சாய் பாபா

இன்றைய கல்வி முறை கற்றவரை சுயநலவாதியாக்குகிறது. அந்த நபரை புலன்களுக்கு அடிமையாக்குகிறது. அதன் விளைவாக அந்த நபர் தனது தெய்வீக தன்மையை மறந்து விடுகிறார். –சாய் பாபா

நாம் எவ்வளவு அதிகமாகக் கற்றுக் கொள்கிறோமோ, நாம் அவ்வளவு அதிகமாக நம் அறியாமையை அறிந்துகொள்கிறோம். –பெர்சி பைஷ் ஷெல்லி

உனது தோல்விக்கான காரணத்தைத் தேடுவதை நிறுத்திவிட்டு, உன் வெற்றிக்குத் தேவையான விஷயங்களைக் கண்டறிய முற்படு

சில சமயம் வெற்றி பெறுவது கூட எளிதுதான். ஆனால் அதைத் தொடர்ந்து தக்க வைப்பதுதான் மிகக் கடினம்

எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும் அதற்கு தீர்வு காண வழி இருக்கும்போது, உனது பிரச்சனைக்கான தீர்வுக்கும் ஏதேனும் வழி இருக்கும்.

வருங்காலத்தைப் பற்றிய கவலை வேண்டாம். நிகழ்காலத்தில் சிறப்பாய் செயல்பாட்டால் வருங்காலம் தன்னால் மாறும்.

மாணவர்களுக்கான பொன்மொழிகள்:

கற்றலைப் பற்றிய அழகான விடயம் என்னவென்றால், அதை உங்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது. –பி.பி. கிங்

கல்வியே சிறந்த நண்பன். கற்றவர் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார். கல்வி அழகையும் இளமையையும் வெல்லும். –சாணக்யா

கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். –ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்

கல்வி என்பது ஒரு செலவு அல்ல. அது ஒரு முதலீடு என்று நாங்கள் நம்புகிறோம். –லிண்டன் பெய்ன்ஸ் ஜான்சன்

தோல்வியை விட சந்தேகம் அதிக கனவுகளைக் கொல்கிறது.

  • உங்களது எதிர்காலத்தை உடனடியாக மாற்ற முடியாது, ஆனால் உங்களது பழக்கங்களை மாற்றலாம். அந்த பழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தை மாற்றும்.

ஒவ்வொரு நாளும் உங்களுக்குக் கிடைக்கும் இரண்டாம் வாய்ப்பு.

உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்கள் இருக்க வேண்டும்.

உலகத்தை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம், கல்வி.

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான். கடமையை செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி.

மாணவர்களுக்கான எளிமையான பொன்மொழிகள்:

  • படிப்பு ஒரு புதையல் அதை தேடி கண்டுபுடி
  • காலம் கடந்து செல்லும் ஆனால் கல்வி உன்னுடன் நிற்கும்
  • செயலில் உறுதி படிப்பில் கவனம்
  • பயம் தோல்வியின் தொடக்கம். தைரியம் வெற்றியின் முதல்படி
  • தோல்வி ஒரு படிக்கல் வெற்றி ஒரு பயணம்
  • கல்வி ஒரு கைவிளக்கு அதை ஏற்றி உலகை ஒளிரச் செய்
  • முயற்சி இல்லையேல் முன்னேற்றம் இல்லை
  • நேரத்தை செதுக்கு வெற்றியை உருவாக்கு
  • ஒரு சிறிய புத்தகம் பெரிய கனவுகளை திறக்கும்.
  • வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
  • சுவர் இருந்தால் தானே சித்திரம்  வரைய முடியும்
  • இளங்கன்று பயம் அறியாது
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
  • மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
  • அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்

தினமும் பயன்படுத்தும் தமிழ் சொற்கள் ஹிந்தியில்..!

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now