Promotion Request Letter Format in Tamil
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். பொதுவாக கடிதம் எழுதவுதற்கென்று ஒரு முறை இருக்கிறது. அதன் படியே எழுத வேண்டும். கடிதம் எழுதல் என்பது ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தவாறு மாறுபடும். எனவே, அந்த வகையில் இன்றைய பதிவில் promotion request letter format பற்றி பார்க்கலாம் வாங்க.
அலுவலகத்தில் நீண்டகாலமாக பணிபுரிந்து இன்னும் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்பதை உணர்ச்சி பணியாளர்கள் உயர் பதிவில் உள்ள மேலாளர்களுக்கு பதவி உயர்வு கோரிக்கை கடிதம் எழுத நினைப்பார்கள். இந்த கடிதத்தை சில பேர், காகித தாளிலும், சில பேர் Word format -லும் டைப் செய்து மேலாளர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே, அவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் promotion request letter format பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பதவி உயர்வு கடிதம் என்றால் என்ன.?
பதவி உயர்வு கோரிக்கை கடிதம் என்பது ஒரு நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த ஒரு பணியாளர் உயர் பதவி வேண்டி எழுதும் முறையான ஆவணமாகும். இது , பல்வேறு நிலைகளை உள்ளடக்கியது. அதாவது, பணியாளரின் அனுபவம், தொழில் வளர்ச்சி, வேலை திறன் உள்ளிட்ட பல திறன்களின் அடிப்படையில் பதவி உயர்வு கொடுக்கப்படுகிறது. இவை அனைத்தையும் பூர்த்தி செய்த பணியாளர்கள் பதவி உயர்வு கோரிக்கை கடிதம் அணுகலாம்.
பதவி உயர்வு கோரிக்கை கடிதம் தமிழில்:
[உங்கள் பெயர்] [உங்கள் பணியின் பெயர்] [உங்கள் துறை] [உங்கள் தொலைபேசி எண்](தேதி மற்றும் வருடம்)
[பணியிடத்தின் முதலாளி பெயர்] [முதலாளியின் வேலை பெயர்] [நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி]அன்புள்ள [திரு/திருமதி/திருமதி. முதலாளி பெயர் சர்/மேடம்],
இந்த நிறுவனத்தில் எனது பதவி உயர்வுக்கான ஆர்வத்தை வெளிக்காட்ட விரும்பி எழுதுகிறேன். நான் இந்த ——————-(பணியின் பெயர்) பணியில் பல வருடங்களாக பணியாற்றி வருகிறேன். மேலும், பல சிறந்த பணிகளை ஆற்றி நிறுவனத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பைச் செய்துள்ளேன். இந்நிலையில் நான் உயர்ந்த பதவிக்கான தகுதி தயாராகி உள்ளேன் என்று நம்புகிறேன். எனது திறமைகளையும் நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி நிறுவனத்திற்கு உயர்பதவியில் பங்களிக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.பதவி உயர்வு என்பது கூடுதல் பொறுப்புகளுடன் வரும் என்பதை நான் அறிவேன், அதனுடன் வரும் எந்த சவால்களையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்.
நிறுவனத்தின் வெற்றிக்கு நான் உறுதிகூறுகிறேன். முக்கியமாக நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு என்னால் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். எனவே, இந்நிறுவனத்தில் ஒரு உயர் பதவி ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனது கோரிக்கையை நீங்கள் பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மிக்க நன்றி
தங்கள் உண்மையுள்ள,
[உங்கள் கையெழுத்து] [உங்கள் வேலை பெயர்]Promotion Request Letter Format in Word:
சைபர் கிரைம் புகார் கடிதம் எழுதுவது எப்படி
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |