விகிதமுறு எண்கள் | Rational Numbers in Tamil

Advertisement

விகிதமுறு எண்கள் என்றால் என்ன? | Rational Numbers Meaning in Tamil

பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் படிக்கும் போது மிகவும் கடினமான பாடம் எது என்று கேட்டால் சட்டென்று அனைவருக்கும் வரும் பதில் கணிதம் தான். கணித பாடம் பார்ப்பதற்கு தான் கடினமாக இருக்கும், ஆனால் அதை புரிந்து கொண்டு படித்தால் கணிதத்தை விட எளிமையான பாடம் எதுவும் இருக்க முடியாது. கணிதத்தில் Rational Numbers என்ற பாடம் உண்டு. இந்த பாடம் 8-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு வரை வரும். நாம் இந்த தொகுப்பில் Rational Numbers என்றால் என்ன? மற்றும் அதற்கான சில எடுத்துக்காட்டுகளையும் பார்க்கலாம் வாங்க.

விகிதமுறு எண்கள் என்றால் என்ன? | What is Rational Number in Tamil:விகிதமுறு எண்கள் என்றால் என்ன

  • இரண்டு முழு எண்களின் விகிதமாக p/q என்ற வடிவில் எழுதக்கூடிய எண்கள் விகிதமுறு எண்கள் (Rational Numbers) எனப்படும்.
  • விகிதமுறு எண்களின் கணத்தை Q என்று குறிப்பிடுகிறார்கள். முழு எண்களை Z என்று குறிப்பிடுகிறார்கள்.

விதிகள்:

  • p மற்றும் q இரண்டுமே முழு எண்களாக (Integers) இருக்க வேண்டும். (-3, -2, -1, 0, 1, 2, 3)
  • q≠0-ஆக இருக்க வேண்டும். ஒரு வேளை q=0 ஆக இருந்தால் இதற்கு விடையை கண்டுப்பிடிக்க முடியாது. Example: 5/0, 2/0, 4/0 (∞)

Rational Numbers Examples in Tamil:

உதாரணம்: 1

  • 5/3 (p/q) என்ற வடிவில் இருப்பதால் இது விகிதமுறு எண்கள் எனப்படும்.

1-2/3 என்று இருந்தால் முதலில் தகாப்பின்னமாக (improper fraction) மாற்ற வேண்டும்.

1×3+2=5

விடை: 5/3

உதாரணம்: 2

கேள்வி: 1/4 and 1/2 என்ற எண்ணில் உள்ள விகிதமுறு எண்களை கண்டுபிடிக்க வேண்டும். 

  • முதலில் பகுப்பு எண்களை (Denominators) ஒரே மாதிரியான எண்ணாக மாற்றி கொள்ள வேண்டும்.

a=1/4

b=1/2

  • Denominator ஒரே மாதிரியாக வருவதற்கு 1/4 என்பதை 2-ஆலும், 1/2 என்பதை 4-ஆலும் பெருக்கி கொள்ள வேண்டும்.

1×2
—– = 2/8
4×2

1×4
—– = 4/8
2×4

2/8 மற்றும் 4/8 இரண்டு எண்களுக்கும் இடையில் உள்ள விகிதமுறு எண் 3/8 ஆகும்.

விடை: 3/8

Rational Numbers in Tamil – விகிதமுறு எண்கள்:

முடிவடையக்கூடிய தசம எண்களை விகிதமுறு எண்கள் என்று சொல்லலாம். Example: 1.25, 0.765432, 1.7016, 0.661

0.11111… இது போன்று ஒரே எண் மீண்டும் மீண்டும் விடையாக வந்தால் அதுவும் விகிதமுறு எண்கள் (Rational Numbers) எனப்படும்.

எட்டாம் வகுப்பு கணிதம் வினா விடைகள்
7 ஆம் வகுப்பு கணிதம் வினா விடை

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement