ஆறாம் வகுப்பு வளர் தமிழ் கேள்வி பதில் | Samacheer Kalvi 6th Tamil Book Back Answers Chapter 1.3
வணக்கம்.. இந்த பதிவில் சமச்சீர் கல்வி 6-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் உள்ள வளர் தமிழ் ஒரு மதிப்பெண் வினா விடைகளை பதிவு செய்துள்ளோம். ஆகவே இப்பதிவு 6-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகர்களுக்கும். ஆசிரியர்களுக்கும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க ஆறாம் வகுப்பு வளர் தமிழ் வினா விடைகள் பற்றி படித்து பயன்பெறலாம்.
ஆறாம் வகுப்பு வளர் தமிழ் வினா விடைகள் – சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் _________________
- புதுமை
- பழமை
- பெருமை
- சீர்மை
விடை: பழமை
2. ‘இடப்புறம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________________
- இடன் + புறம்
- இடது + புறம்
- இட + புற
- இடப் + புறம்
விடை: இடது + புறம்
3. ‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________________
- சீர் + இளமை
- சீர்மை + இளமை
- சீரி + இளமை
- சீற் + இளமை
விடை: சீர் + இளமை
4. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________
- சிலம்பதிகாரம்
- சிலப்பதிகாரம்
- சிலம்புதிகாரம்
- சிலபதிகாரம்
விடை: சிலப்பதிகாரம்
5. கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________
- கணினிதமிழ்
- கணினித்தமிழ்
- கணிணிதமிழ்
- கனினிதமிழ்
விடை: கணினித்தமிழ்
6. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________
- கண்ணதாசன்
- பாரதியார்
- பாரதிதாசன்
- வாணிதாசன்
விடை: பாரதியார்
7. ‘மா’ என்னும் சொல்லின் பொருள்________
- மாடம்
- வானம்
- விலங்கு
- அம்மா
விடை: விலங்கு
ஆறாம் வகுப்பு தமிழ் வினா விடைகள் முதல் பருவம் – கோடிட்ட இடத்தை நிரப்புக
1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ________________
விடை: மொழி
2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ________________
விடை: தொல்காப்பியம்
3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ________________ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
விடை: எண்களின்
Samacheer Kalvi 6th Books Tamil Guide:
1. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று பாடியவர்
- பாரதியார்
- சுரதா
- பெருஞ்சித்திரனார்
- தேசிய விநாயகம்பிள்ளை
விடை: பாரதியார்
2. பல மொழிகள் கற்ற புலவர்
- பாரதிதாசன்
- வள்ளலார்
- பாரதியார்
- திருவள்ளுவர்
விடை: பாரதியார்
3. நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல்
- தொல்காப்பியம்
- சிலப்பதிகாரம்
- திருவாசம்
- தேவாரம்
விடை: தொல்காப்பியம்
4. தமிழ் – என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்
- சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம்
- திருக்குறள்
- தேவாரம்
விடை: தொல்காப்பியம்
5. தமிழ்நாடு – என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்
- சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம்
- திருக்குறள்
- தேவாரம்
விடை: சிலப்பதிகாரம்
5. தமிழன் – என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்
- மணிமேகலை
- தொல்காப்பியம்
- குண்டலகேசி
- அப்பர் தேவாரம்
விடை: அப்பர் தேவாரம்
6. மல்லியின் – தாவர இலைப்பெயர்
- தாள்
- தழை
- புல்
- ஓலை
விடை: தழை
7. கமுகு (பாக்கு) – தாவர இலைப்பெயர்
- தாள்
- கூந்தல்
- புல்
- ஓலை
விடை: கூந்தல்
8. உழவர் – என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்
- நற்றிணை
- குறுந்தொகை
- கலிக்தொகை
- அகநானூறு
விடை: நற்றிணை
9. பாம்பு – என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்
- திருவாசம்
- குறுந்தொகை
- புறநானூறு
- அகநானூறு
விடை: குறுந்தொகை
9. அரசு – என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்
- நற்றிணை
- குறுந்தொகை
- கலிக்தொகை
- திருக்குறள்
விடை: திருக்குறள்
Samacheer Kalvi 6th Tamil Book Back Answers Chapter 1.3 – கோடிட்ட இடத்தை நிரப்புக
1. உலகில் ___________ மேற்பட்ட மொழிகள் உள்ளன.
விடை: ஆயிரத்திற்கும்
2. இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய ________________ தோன்றியிருக்க வேண்டும்.
விடை: இலக்கண விதிகள்
3. ________________ மிகவும் தொன்மையான மொழி
விடை: தமிழ் மொழி
4. தமிழ் மொழி பெரும்பாலும் ________________ எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
விடை: வலஞ்சுழி
5. உயர்திணை எதிர்ச்சொல் ________________ என அமைய வேண்டும்.
விடை: தாழ்திணை
6. தாழ்திணை என்று கூறாமல் ________________ என அழைக்கிறாேம்.
விடை: அஃறிணை
7. தமிழுக்கு ________________ என்ற சிறப்பு பெயரும் உண்டு
விடை: முத்தமிழ்
8. தமிழில் வலஞ்சுழி எழுத்துக்கள் ________________
விடை: அ, எ, ஒள, ண, ஞ
9. தமிழில் இடஞ்சுழி எழுத்துக்கள் ________________
விடை: ட, ய, ழ
10. ________________ , ________________ தமிழ் வடிவங்களாகும்
விடை: அறிவியல் தமிழும். கண்ணித்தமிழும்
11. ________________ , ________________ ஆகிய இரண்டும் சங்க நூல்கள் எனப்படும்
விடை: பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
பொருத்துக
- அருகு, கோரை – தோகை
- நெல், வரகு – ஓலை
- கரும்பு, நாணல் – புல்
- பனை, தென்னை – தாள்
விடை: 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ
பொருத்துக
- முதலை – பதிற்றுப்பத்து
- மருந்து – பெரும்பாணாற்றுப்படை
- பார் – குறுந்தொகை
- வெள்ளம் – அகநானூறு
விடை: 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ
சேர்த்து எழுதுக
- செம்மை + மொழி – செம்மொழி
- பாகு + அல் + காய் – பாகற்காய்
ஆறாம் வகுப்பு இன்பத்தமிழ் கேள்வி பதில் |
ஆறாம் வகுப்பு தமிழ்க்கும்மி வினா விடைகள் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |