6th Tamil Book Back Questions and Answers Chapter 1.2 | ஆறாம் வகுப்பு தமிழ்க்கும்மி வினா விடைகள்

Kalvi 6th Tamil Book Term 1 Chapter 1.2

ஆறாம் வகுப்பு தமிழ்க்கும்மி வினா விடைகள்

வணக்கம் இந்த பதிவில் சமச்சீர் கல்வி 6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் உள்ள தமிழ்க்கும்மி பாடலின் வினா விடை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். படிக்கும் மாணவர்களுக்கும், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் படித்து பயன்பெறுங்கள் நன்றி.

தமிழ்க்கும்மி பாடல் வரிகள்

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!
ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு
ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும்
ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
அழியாமலே நிலை நின்றதுவாம்!
பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் — அன்பு
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர்
மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த
மேதினி வாழவழி காட்டிருக்கும்!

பெருஞ்சித்திரனார்



தமிழ்க்கும்மி வினா விடைகள் – Samacheer Kalvi 6th Tamil Book Term 1 Chapter 1.2

சொல்லும் பொருளும்

  1. ஆழிப்பெருக்கு – கடல்கோள்
  2. மேதினி – உலகம்
  3. ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
  4. உள்ளப்பூட்டு – அறிய விரும்பாமை
  5. மெய் – உண்மை
  6. வழி – நெறி
  7. அகற்றும் – விலக்கும்
  8. மேன்மை – உயர்வு
  9. அறம் – நற்செயல்


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தாய் மொழியில் படித்தால் _____________ அடையலாம்

  1. பன்மை
  2. மேன்மை
  3. பொறுமை
  4. சிறுமை

விடை : மேன்மை

2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _____________ சுருங்கிவிட்டது

  1. மேதினி
  2. நிலா
  3. வானம்
  4. காற்று

விடை : மேதினி

3. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________

  1. செந் + தமிழ்
  2. செம் + தமிழ்
  3. சென்மை + தமிழ்
  4. செம்மை + தமிழ்

விடை : செம்மை + தமிழ்

4. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

  1. பொய் + அகற்றும்
  2. பொய் + கற்றும்
  3. பொய்ய + கற்றும்
  4. பொய் + யகற்றும்

விடை : பொய் + அகற்றும்

5. பாட்டு+ இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ____________

  1. பாட்டிருக்கும்
  2. பாட்டுருக்கும்
  3. பாடிருக்கும்
  4. பாடியிருக்கும்

விடை : பாட்டிருக்கும்

6. எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ____________

  1. எட்டுத்திசை
  2. எட்டிதிசை
  3. எட்டுதிசை
  4. எட்டிஇசை

விடை : எட்டுத்திசை



பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சாெற்களை எடுத்து எழுதுக.

  1. காெட்டுங்கடி – கோதையரே
  2. ட்டுத்திசை – ட்டிடவே,
  3. ழி – ற்று
  4. றிவு – ழியாமலே
  5. மெய் – மேதினி


பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சாெற்களை எடுத்து எழுதுக.

  1. காெட்டுங்கடி – எட்டுத்திசை
  2. ழி –ழி
  3. பொய் – மெய்
  4. ண்டதுவாம் – கொண்டதுவாம்
  5. பூட்டறுக்கும் – பாட்டிருக்கும்


ஆறாம் வகுப்பு தமிழ்க்கும்மி வினா விடைகள்  – கூடுதல் வினாக்கள் (6th Tamil Book Back Questions and Answers)

1. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. பெருஞ்சித்திரனார்
  4. கவிமணி

விடை : பெருஞ்சித்திரனார்

2. பாவலரேறு என்று சிறப்புப்பெயரால் அழைக்கப்படும் கவிஞர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. பெருஞ்சித்திரனார்
  4. கவிமணி

விடை : பெருஞ்சித்திரனார்

3. நும் பாடப்பகுதியில் இடம்பெறும் தமிழ்க்கும்மி கவிதைப்பேழை பாடலைப் பாடியவர்

  1. பாரதியார்
  2. கண்ணதாசன்
  3. பெருஞ்சித்திரனார்
  4. கவிமணி

விடை : பெருஞ்சித்திரனார்

4. நும் பாடப்பகுதியில் இடம்பெறும் தமிழ்க்கும்மி கவிதைப்பேழை பாடல் இடம்பெறும் நூல்

  1. கனிச்சாறு
  2. கொய்யாக்கனி
  3. பாவியக்கொத்து
  4. நூறாசிரியம்

விடை : கனிச்சாறு

5. தென்மொழி. தமிழ்ச்சிட்டு. தமிழ் நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர்

  1. கல்யாண சுந்தரனார்
  2. கண்ணதாசன்
  3. பெருஞ்சித்திரனார்
  4. சுரதா

விடை : பெருஞ்சித்திரனார்

7. திசைகள் ____________ செந்தமிழின் புகழ் பரவ வேண்டும்.

  1. இரண்டிலும்
  2. எட்டிலும்
  3. நான்கிலும்
  4. பத்த்திலும்

விடை : நான்கிலும்

8. ______________ சிறந்து வாழ்வதற்கான வழிகாட்டு முறைகள் காெண்டது தமிழ்.

  1. உலகம்
  2. ஊர்
  3. தெரு
  4. நாடு

விடை : உலகம்



கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாலவர் ___________________

விடை : பெருஞ்சித்திரனார்

2. எட்டுதிசையிலும் ___________________ புகழ்

எட்டிடவே கும்மி கொட்டுங்கடி- விடுபட்ட சொல்லை நிரப்புக

விடை : செந்தமிழின்

3. ___________________ பல நூறு ஆண்டுகளைக் கண்டது

விடை : தமிழ்மொழி

4. பொய்யாமை அகற்றும் மொழி ___________________

விடை : தமிழ்மொழி

5. உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி ___________________

விடை : தமிழ்மொழி



பொருத்துக

  1. ஆழி – உலகம்
  2. மேதினி –  கடல்
  3. மேன்மை – நீண்டதொருகாலப்பகுதி
  4. ஊழி – உயர்வு

விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ



பிரித்து எழுதுக

  1. காெட்டுங்கடி = காெட்டுங்கள் + அடி
  2. வழிகாட்டிருக்கும் = வழிகாட்டு + இருக்கும்
  3. செந்தமிழ் = செம்மை + தமிழ்
  4. ஊற்றெனும் = ஊற்று + எனும்
  5. பாட்டிருக்கும் = பாட்டு + இருக்கும்


சேர்த்து எழுதுக

  1. இளமை + காேதையர் = இளங்காேதையர்
  2. பூட்டு + அறுக்கும் = பூட்டறுக்கும்
  3. அறம் + மேன்மை = அறமேன்மை
  4. பல + நூறு = பலநூறு
  5. ஊற்று + எனும் = ஊற்றெனும்
ஆறாம் வகுப்பு இன்பத்தமிழ் கேள்வி பதில்
ஆறாம் வகுப்பு வளர் தமிழ் கேள்வி பதில்
கனவு பலித்தது வினா விடை
ஆறாம் வகுப்பு இயல் 1 தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும் வினா விடை

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com