ஆறாம் வகுப்பு தமிழ் எழுத்துக்களின் வகை தொகை மதிப்பீடு

Advertisement

ஆறாம் வகுப்பு இயல் 1 தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும் வினா விடை | Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.5

ஆறாம் வகுப்பு இயல் ஒன்றில் உள்ள தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும் பாடத்தில் உள்ள வினா விடைகளை பற்றி தெரிந்து கொள்வோம். இப்பதிவு ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இருக்கும். சரி வாங்க ஆறாம் வகுப்பு தமிழ் எழுத்துக்களின் வகை தொகை பாடத்திற்க்கான வினா விடைகளை கீழ் காண்போம்.

தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் வினா விடை – 6th Tamil Book Back Questions and Answers Chapter 1.5

கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக

1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல்

விடை: அது

2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச் சொல்

விடை: தீ

3. 4 மாத்திரை அளவுள்ள வல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சாெல்

விடை: கண்டேன்

4. 4 மாத்திரை அளவுள்ள மெல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்

விடை: நண்பகல்

5. 4 மாத்திரை அளவுள்ள இடையின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்

விடை: வாழ்த்து

6. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல்

விடை: அஃது



ஆறாம் வகுப்பு தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும் மதிப்பீடு

சிறு வினாக்கள்

1. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் யாவை?

விடை:

எழுத்து இலக்கணம்
சொல் இலக்கணம்
பொருள் இலக்கணம்
யாப்பு இலக்கணம்
அணி இலக்கணம்

2. உயிர்மெய் எழுத்துகளை எத்தனை வகைப்படுத்தலாம்?

விடை: மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய்க்குறில் தோன்றுகிறது.
மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது.
உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இரு வகைப்படுத்தலாம்

3. எழுத்தை ஒலிக்கும் காலஅளவு வகைப்படுத்துக

விடை:

குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு 1 மாத்திரை
நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு 2 மாத்திரை
மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு ½ மாத்திரை
ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு ½ மாத்திரை

 

4. தமிழ் மெய் எழுத்துகள் ஒலிக்கும் முறை கூறுக

விடை: மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும்

வல்லினம் க், ச், ட், த், ப், ற்
மெல்லினம் ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம் ய், ர், ல், வ், ழ், ள்

 

5. உயிர்மெய் தோன்றும் விதம் பற்றி எழுதுக?

விடை: மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள்.



ஆறாம் வகுப்பு தமிழ் வினா விடைகள் முதல் பருவம்

– 6th Tamil Book Back Questions and Answers in Tamil

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் ____________ எனப்படுகிறது

விடை: எழுத்து

2. குறுகி ஒலிக்கும் ____________ ஆகிய ஐந்தும் குறில் எழுத்துகள்.

விடை: அ, இ, உ, எ, ஒ

3. நீண்டு ஒலிக்கும் _________________ ஆகிய ஏழும் நெடில் எழுத்துகள்.

விடை: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ

4. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு ________________

விடை: அரை மாத்திரை



மொழியை ஆள்வோம்

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக

1. பழமொழியின் சிறப்பு சொல்வது

  1. விரிவாகச்
  2. சுருங்கச்
  3. பழமையைச்
  4. பல மொழிகளில்

விடை: சுருங்கச்

2. நோயற்ற வாழ்வைத் தருவது ______________________

விடை: சுத்தம்

3. உடல் ஆரோக்கியமே அடிப்படை _______________________

விடை: உழைப்பு

4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?

விடை: உணவு, உடை, உறைவிடம்

5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.

விடை: சுத்தம்



பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக

1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.

விடை: எங்க பள்ளியில் சுற்றுலா கூட்டிட்டிப் போறாங்க,

2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க

விடை: பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னாங்க



திரட்டுக

“மை” என்னும் எழுத்தில் முடியும் சொற்களின் பட்டியல் தயாரிக்க.

  • உண்மை
  • பொய்மை
  • பெண்மை
  • மெய்மை
  • வெண்மை
  • கருமை
  • பொறுமை
  • நேர்மை
  • மேன்மை
  • பன்மை
  • வன்மை
  • பெருமை
  • சிறுமை
  • வாய்மை
  • எருமை
  • கருமை


கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக

1. கரும்பு

கரு
கம்பு

2. கவிதை

கவி
விதை
கதை

3. பதிற்றுப்பத்து

பதி
பத்து
பற்று
துதி

4. பரிபாடல்

பரி
பாடல்
பாரி
பல்
பால்

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக

(நூல், மொழி, கோல், மீன், நீதி, எழுது, கண், வெளி, தமிழ், மணி, மாலை, விண்)

  1. விண்மீன்
  2. மணிமாலை
  3. நீதிநூல்
  4. விண்வெளி
  5. தமிழ்மாலை
  6. கண்மணி
  7. எழுதுகோல்
  8. தமிழ்மொழி
  9. தமிழ்நூல்
  10. நீதிமொழி
  11. தமிழ்வெளி
  12. நீதிமணி
  13. மணிமொழி
  14. மீன்கண்
  15. நீதிமாலை


பொருத்தமான சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக

அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை, ஆற்றல், ஈடு, இசை, உணர்வு, ஏடுகள்,
உரிமை, என்றும், எளிதாய், உவகை, அன்பு

1. ________________ தருவது தமிழ்

விடை: அன்பு

2. ________________ தருவது தமிழ்

விடை: ஏற்றம்

3. ________________ தருவது தமிழ்

விடை: இன்பம்

4. ________________ இல்லாதது தமிழ்

விடை: ஈடு

5. ________________ தருவது தமிழ்

விடை: ஆற்றல்

6. ________________ தருவது தமிழ்

விடை: ஊக்கம்

7. ________________ வேண்டும் தமிழ்

விடை: என்றும்

8. ________________ தருவது தமிழ்

விடை: உணர்வு



கட்டங்களில் மறைந்துள்ள பெயர்களைக் கண்டுபிடிக்க:

பா தி தா ன்
தா சு ம்
தி ரு ள் ளு ர்
யா பா தை ஒள வை யா ர்
ர் ன்  ச  தா ணி வா ன்

 

விடை:

  1. பாரதிதாசன்
  2. பாரதியார்
  3. திருவள்ளளுவர்
  4. ஒளவையார்
  5. வாணிதாசன்
  6. கம்பர்


கலைச்சொல் அறிக:

  1. வலஞ்சுழி – Clock wise
  2. இடஞ்சுழி – Anti Clock wise
  3. இணையம் – Internet
  4. குரல்தேடல் – Voice Search
  5. தேடுபொறி – Search engine
  6. தொடுதிரை – Touch Screen
ஆறாம் வகுப்பு இன்பத்தமிழ் கேள்வி பதில்
ஆறாம் வகுப்பு தமிழ்க்கும்மி வினா விடைகள்
ஆறாம் வகுப்பு வளர் தமிழ் வினா விடைகள்
கனவு பலித்தது வினா விடை

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement