ஏழாம் வகுப்பு கணிதம் எண்ணியல் | 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.1

Advertisement

ஏழாம் வகுப்பு முதல் பருவம் கணக்கு எண்ணியல் | 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.1

வணக்கம் நண்பர்களே இன்றைய கல்வி பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் பயனுள்ள வகையில் அமைவதற்கு ஏற்றவாறு கணித பாடத்தில் உள்ள வினா விடைகளை பார்க்கலாம். மற்ற பாடத்தை விட மிகவும் எளிமையான பாடம் என்றால் அது கணித பாடம் தான். ஒரு பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியுமானால் அது கணித பாடம் தான். இந்த தொகுப்பில் நாம் ஏழாம் வகுப்பு கணித புத்தகத்தில் எண்ணியல் பாடத்தில் உள்ள வினா விடைகளை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஏழாம் வகுப்பு முதல் பருவம் கணக்கு எண்ணியல்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

(i) (-30) + _______ = 60

விடை: 90

(ii) (-5) + _______ = -100

விடை: -95

(iii) (-52) + (-52) = _______

விடை: -104

(iv) _______ + (-22) = 0

விடை: 22

(v) _______ + (-70) = 70

விடை: 140

(vi) 20 + 80 + _______ = 0

விடை: -100

(vii) 75 + (-25) = _______

விடை: 50

(viii) 171 + _______ = 0

விடை: -171

(ix) [(-3) + (-12)] + (-77) = _______ + [[-12) +(-77)]

விடை: -3

(x) (-42) + [ _______ + (-23)] = [ _______ + 15] + _______

விடை: 15, -42, -23



சரியா, தவறா எனக் கூறுக – ஏழாம் வகுப்பு கணிதம் எண்ணியல்:

(i) (-32) இன் கூட்டல் எதிர்மறை (-32)

விடை: தவறு

(ii) (-90) = (-30) = 60

விடை: தவறு

(iii) (-125) + 25 = -100

விடை: சரி



7 ஆம் வகுப்பு கணிதம் வினா விடை (7th Maths Book Back Answers Tamil Medium)

கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக:

(i) எண்கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக. 8 மற்றும் -12

7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.1

விடை: 8 + (-12) = – 4

(ii) எண்கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: (-3) மற்றும் (-5)

7th maths guide in tamil medium

விடை: (-3) + (-5) = -8

(iii) (-100) + (-10) = __________

விடை: (-100) + (-10) = -110

(iv) 20 + (-72) = __________

விடை: 20 + (-72) = – 52

(v) 82 + (-75) = __________

விடை: 82 + (-75) = 7

(vi) -48 + (-15) = __________

விடை: -48 + (-15) = -63

(vii) – 225 + (-63) = __________

விடை: – 225 + (-63) = -288



7 ஆம் வகுப்பு கணித புத்தக பதில்கள் (ஏழாம் வகுப்பு கணிதம் எண்ணியல்)

  1. தேன்மலர் போட்டித் தேர்வில் பங்கேற்கிறாள். அத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் குறைக்கப்படும். முதல் தாளில் அவள் 25 வினாக்கள் தவறாகப் பதில் அளிக்கிறாள். மேலும் தாள் II இல் 13 வினாக்களுக்குத் தவறாகப் பதில் அளிக்கிறாள். அவளுக்குக் குறைக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு எனக் கண்டறிக.

தாள் I = -25
தாள் II = -13
குறைக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் = தாள் I + தாள் II
= (- 25) + (-13)
= – 38

2. ஒரு வினாடிவினாவில் மூன்று அடுத்தடுத்த சுற்றுகளில் குழு A பெற்ற மதிப்பெண்கள் + 30, – 20, 0 மற்றும் குழு B பெற்ற மதிப்பெண்கள் – 20, 0, + 30 எனில், வெற்றிபெற்ற குழு எது? முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலுமா?

குழு A = (+30) + (-20) + 0 = 10, குழு B = (-20) + (0) + (+30) = 10
குழு A = குழு B [ஆம், முழுக்களின் வரிசையை மாற்றிக் கூட்ட இயலும்]

3. (11 + 7) + 10 மற்றும் 11 + (7 + 10) சமமானவையா? எந்தப் பண்பின் அடிப்படையில் சமம்?

சேர்ப்பு விதி:
(A + B) + C = A + (B + C)
(11 + 7) + 10 – 18 + 10 = 28
11 + (7 + 10)= 11 + 17 = 28
சேர்ப்பு விதியின் கீழ் இவை சமம்.

4. கூட்டினால் தீர்வு 2 வரும்படி ஏதாவது 5 இணை முழுக்களைக் காண்க

0 + 2 = 2
0 + 1 = 2
(-1) + 3 = 2
(-2) + 4 = 2
(-3) + 5 = 2
∴ 0 + 2, 1 + 1, (-1) + 3, (-2) + 4, (-3) + 5 (ஏதேனும் ஒன்று)

கொள்குறி வகை வினாக்கள் (7th Maths Guide in Tamil Medium)

5. நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை +18°C ஆகும். வெப்பநிலை மணிக்கு 3°C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை -12°C ஆக இருக்கும்?

(i) 12 நள்ளிரவு
(ii) 12 நண்பகல்
(iii) 10 மு.ப.
(iv) 10 பி.ப

விடை: 10 மு.ப.

6. குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.

(i) – 9 + (-5) + 6
(ii) 8 + (-12) -6
(iii) -4 + 2 + 10
(iv) 10 + (-4) + 8

விடை: – 9 + (-5) + 6

7. (- 10) + (+ 7) = _______

(i) +3
(ii) -3
(iii) -17
iv) +17

விடை: -3

8. (-8) + 10 + (-2) = ________

(i) 2
(ii) 8
(iii) 0
(iv) 20

விடை: 0

9. 20 + (-9) + 9 = __________

(i) 20
(ii) 29
(iii) 11
(iv) 38

விடை:  20

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement