ஏழாம் வகுப்பு கணிதம் எண்ணியல் Ex 1.2 | Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 Ex 1.2 Tamil

7th Maths Chapter 1 Exercise 1.2 Tamil Medium

7 ஆம் வகுப்பு கணிதம் வினா விடை | Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 Ex 1.2 in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய கல்வி பகுதியில் ஏழாம் வகுப்பு கணித பாடத்தில் உள்ள வினா விடைகளை பார்க்கலாம். பொது தேர்விற்கு கேட்கப்படும் பெரும்பாலான கேள்வி பதில்கள் 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு போன்ற பாட புத்தகத்தில் உள்ள வினா விடைகள் தான் கேட்கப்படுகின்றன. நாம் இந்த தொகுப்பில் ஏழாம் வகுப்பு கணித புத்தகத்தில் இருக்கும் எண்ணியல் (Ex 1.2) பாடத்தில் உள்ள வினா விடைகளை பார்க்கலாம் வாங்க.

7th Maths Chapter 1 Exercise 1.2 Tamil Medium

கோடிட்ட இடங்களை நிரப்புக:

(i) – 44 + __________ = -88

விடை: – 44

(ii) __________ – 75 = -45

விடை: 30

(iii) __________ – (+50) = -80

விடை: – 30சரியா, தவறா எனக் கூறுக – ஏழாம் வகுப்பு கணிதம் எண்ணியல் Ex 1.2:

(i) (-675) – (-400) = -1075

விடை: தவறு

(ii) 15 – (-18) க்கு 15 + 18 சமமானது

விடை: சரி

(iii) (-45) – (-8) = (-8) – (-45)

விடை: தவறுகீழுள்ளவற்றின் மதிப்பைக் காண்க – 7th Maths Guide in Tamil Medium

(i) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: -3 – (-4)

7th Maths Chapter 1 Exercise 1.2 Tamil Medium

விடை:  (-3) – (-4) = (-3) + 4 = 1

(ii) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க: 7 – (-10)

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 Ex 1.2 Tamil

விடை: 7 – (- 10) = 7 + 10 = 17

(iii) 35 – (-64) = __________

விடை: 35 – (-64) = 35 + 64 = 99

(iv) -200 – (+100) = __________

விடை: (-200) – (+ 100) = -3007 ஆம் வகுப்பு கணித புத்தக பதில்கள் (7th Maths Chapter 1 Exercise 1.2 Tamil Medium)

  1. கபிலன் தன்னிடம் 10 பென்சில்களை வைத்திருந்தார். அதில் 2 பென்சில்களைச் செந்திலுக்கும் 3 ஐக் கார்த்திக்கும் கொடுத்துவிட்டார். மறுநாள் அவருடைய தந்தை மீண்டும் 6 பென்சில்கள் தருகிறார். மொத்தப் பென்சில்களிலிருந்து 8 பென்சில்களை அவருடைய தங்கைக்குக் கொடுத்தால் அவரிடம் மீதம் உள்ள பென்சில்களின் எண்ணிக்கை யாது?

விடை:

10 – (2) – (3) + 6 – 8
= 10 + (-2) + (-3) + 6 + (-8)
= 16 + (-13) = 3
கபிலனிடம் 3 பென்சில்கள் மீதம் இருக்கும்.

2. ஒரு மின்தூக்கி தற்போது தரைத் தளத்தில் உள்ளது. அது 5 தளங்கள் கீழே செல்கிறது. பிறகு அங்கிருந்து 10 தளங்கள் மேலே செல்கிறது எனில், தற்போது மின்தூக்கி எந்தத் தளத்தில் இருக்கும்?

விடை:  

5 வது கீழ் தளம் = (-5)
10 மேல் தளம் = (+10)
மின்தூக்கி இருக்கும்
தளம் = (-5) + (+10) = +5
5 வது மேல் தளத்தில் இருக்கும்.

3. காலை எழுந்திருக்கும் போது கலாவின் உடல் வெப்பநிலை 102°F ஆக இருந்தது அவள் காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக்கொண்டாள். பிறகு 2 மணிநேரம் கழித்து உடல் வெப்பநிலை 2°F குறைந்தது எனில், கலாவின் தற்போதைய உடல் வெப்பநிலையைக் காண்க.

விடை:

102°F – 2°F = 100F

4. (-17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (-19) கிடைக்கும்?

விடை:

அந்த எண் X என்க.
(-17) + x = -19
x = -19 + 17
x = -2

5. ஒரு மாணவரிடம் (-47) லிருந்து (-12) ஐக் கழிக்கக் கேட்கப்பட்டது. அவருக்கு விடை (-30) எனக் கிடைத்தது. அது சரியா தவறா? நியாயப்படுத்துக.

விடை:

(- 47) – (-12)= (-47) + (+12)
= -35
= – 35 ≠ -30
∴ தவறு (-35 என்பது சரி)கொள்குறி வகை வினாக்கள் – 7th Maths Guide in Tamil Medium:

  1. (-5) – (-18) =?

(i) 23
(ii) -13
(iii) 13
(iv) – 23

விடை: 13

2. (-100) – 0 + 100 =?

(i) 200
(ii) 0
(iii) 100
(iv) – 200

விடை: 0

7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.1

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com