ஏழாம் வகுப்பு சொலவடைகள் வினா விடை | Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.4

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.4

ஏழாம் வகுப்பு சொலவடைகள் | Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.4

Samacheer Kalvi 7th Tamil Book Solutions: வணக்கம் நண்பர்களே இன்றைய கல்வி அறிவு பகுதியில் ஏழாம் வகுப்பு புத்தகத்தில் உள்ள சொலவடைகள் பாடத்தில் இருக்கும் வினா விடைகளை தெரிந்து கொள்ளலாம். பொது தேர்விற்கு கேட்கப்படும் கேள்விகள் பொதுவாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள புத்தகத்தில் இருக்கும் கேள்வி பதில்கள் தான் கேட்கப்படுகின்றன. இது அனைத்து தேர்வாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க ஏழாம் வகுப்பு சொலவடைகள் பாடத்தில் இருக்கும் கேள்வி பதில்களை பார்க்கலாம்.

ஏழாம் வகுப்பு முதல் பருவம் சொலவடைகள்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.4 – சொலவடைகள் ஏழாம் வகுப்பு:

 1. உங்கள் பகுதியில் வழங்கி வரும் சொலவடைகளைத் தொகுத்து வருக.
 • வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் ஜென்மப் பகைங்கிற மாதிரி படிக்காத பையனை போராடித்தான் படிக்க வைக்கணும்.
 • அடை மழைவிட்டாலும் செடி மழை விடாதுங்கிற மாதிரி படிக்கலனா அப்பாவிட்டாலும் அம்மா விட மாட்டாங்க.
 • கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
 • “அப்பன் குதிருக்குள்ள இல்ல.”

2. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சொலவடைகளில் எவையேனும் ஐந்தனைத் தேர்ந்தெடுத்துச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.

 • குத்துக்கல்லுக்குக் குளிரா வெயிலா என்பது போல் என் நண்பன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தான்.
 • தட்டிப்போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லே என்பது போல வறுமையிலே வாடுகிறவங்களுக்கு கை கொடுக்க ஆள் இல்லாமல் திண்டாடுவாங்க.
 • அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்னு சொல்லுற மாதிரி நிழலில் படுத்து தூங்கினதால ஆமையிடம் தோற்று போச்சாம் முயலு!
 • ஆயிரம்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும் உழைக்கிறவன் மத்தியிலே உதவாக்கரை ஒருத்தன் இருந்தால் அந்தக் கூட்டமே கெட்டுவிடும்.
 • புண்ணுக்கு மருந்து போட முடியும் புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா? வீண் விதண்டாவாதம் செய்கிறவனிடம் பேசி ஜெயிக்க முடியாது.

சொலவடைகள் பொம்மலாட்டம் ஏழாம் வகுப்பு

மதிப்பீடு – ஏழாம் வகுப்பு முதல் பருவம் வினா விடை:

 1. பாடப்பகுதி பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக.
 • பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களை படிக்காமலே ஊரைச் சுற்றுகிறான் பையன். அவங்க அம்மா எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கல.
 • ”அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது. இப்ப நீ சரியா படிக்கலன்னா வாழ்க்கையிலே முன்னேற முடியாது. ஒழுங்காப் பள்ளிக்கூடம் போயி படிக்கிற வேலையைப் பாரு” என்கிறார் அப்பா. “படிக்கிறதெல்லாம் எனக்குப் பிடிக்காது” முகத்தில் அறைந்தாற் போல் பேசுகிறான் நம் கதை நாயகன். அப்பா சத்தம் போடுகிறார், சத்தம் கேட்டு அம்மா வெளியே வராங்க, “ராசா, உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ளே விலைபோகும். நீ படிக்கலேன்னா ஊர்ல யாரும் மதிக்கமாட்டங்க. அதனால நீ பள்ளிக்கூடம் போயி நல்லாப் படிச்சுக்க – இது அம்மாவின் உபதேசம்.
 • வேறு வழியில்லாம பையன் பள்ளிக்கூடம் போகிறான். அவனுக்கு படிப்பதில் நாட்டமில்லை, விளையாட யாராவது கிடைப்பாங்களான்னு பார்க்குறான். அங்கே எறும்பு ஒன்ணு போய்கிட்டு இருக்கு , “எறும்பே! எறும்பே! என் கூட விளையாட வர்றியா?” – என்றான் பையன். ”குடல் கூழுக்கு அழுவுதாம் கொண்டை பூவுக்கு அழுவுதாம் எனக்கு நெறைய வேலை கிடக்கு. நான் கிளம்புறேன். நீ அதோ பறக்குதே அந்தத் தேனீகூடப் போய் விளையாடு.
 • “தேனீ! தேனீ! நீ என் கூட விளையாட வறியா? என்றான் பையன்” “உனக்குத்தான் வேலை இல்லை, எனக்குமா வேலை இல்லை. போபோ நான் தேன் எடுக்கனும்” பறந்து போனது தேனீ. பையன் கொஞ்சம் தூரம் நடக்கிறான். பொதிமாடு ஒன்றைப் பார்க்கிறான்.
 • “மாடே! மாடே! சும்மாதானே இருக்கே! என் கூட விளையாட வறியா?” என்றான் பையன்.
  ”எனக்கு வேலை இருக்கு அந்த ஆமையை போய்பாரு என்றது பொதிமாடு”. “ஆமையே! ஆமையே! என் கூட விளையாட வறியா? எனக் கேட்டான் பையன்.
 •  எனக்கு உன்கூட விளையாட நேரமில்லே நீ அந்த முயலைப் போய் பாரு” என்றது ஆமை. முயலை விளையாட அழைத்தான். முயலும் விளையாட மறுத்தது.
 • கடைசியில் குட்டிச்சுவரில் எகிறி குதித்தான் பையன். குட்டிச் சுவரில் இருந்து எறும்பு, பூச்சி எல்லாம் கோபத்தோடு அவன் கையில் கால்ல ஏறி நறுக்கு நறுக்கென்று கடித்தன. அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாதுன்னு அந்தப் பையன் வலி பொறுக்க முடியாமல் கத்திக் கொண்டே ஓடுறான்.
 • அம்மாவைப் பார்த்து “இந்த உலகத்திலே எல்லாரும் அவங்க அவங்க வேலையைப் பாக்குறாங்க ஈ, எறும்பு கூடச் சும்மா இல்லாம வேலை செய்யுதுக. எனக்கு இப்பத்தான் புத்தி வந்தது என்றான் பையன்.
  அம்மா ஆனந்தக் கண்ணீர் சிந்தினாள் மகனின் மன மாற்றத்திற்காக.
ஏழாம் வகுப்பு எங்கள் தமிழ் வினா விடைகள்

கூடுதல் வினாக்கள் (Samacheer Kalvi 7th Tamil Book Solutions)

நிரப்புக :

 1. உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள ……… போகும்.

விடை: விலை

2. அடைமழை விட்டாலும் ……….. மழை விடாது.

விடை: செடி

3. ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு ………….. பூச்சி போதும்.

விடை: அந்துப்பூச்சி

4. பாடிப்பாடிக் குத்தினாலும் ……………. அரிசி ஆகுமா?

விடை: பதரு

5. அதிர அடிச்சா ……… விளையும்.

விடை: உதிர

ஏழாம் வகுப்பு ஒன்றல்ல இரண்டல்ல பாடம்
ஏழாம் வகுப்பு இயல் 1 பேச்சு மொழியும் எழுத்து மொழியும்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com