ஏழாம் வகுப்பு காடு வினா விடை | Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1

Advertisement

ஏழாம் வகுப்பு இயல் 2 | 7th Standard Tamil Book Term 1 காடு Solution Lesson 2.1

வணக்கம் நண்பர்களே இன்றைய கல்வி பகுதியில் ஏழாம் வகுப்பு பாடத்தில் உள்ள காடு பாடலில் உள்ள வினா விடைகளை படித்து அறியலாம். இந்த தொகுப்பு பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த காடு பாடலில் ஒரு தொகுப்பு மனப்பாடப் பாடலாக உள்ளது. தேர்விற்கு கண்டிப்பாக வரும் பாடலில் இதுவும் ஒன்று. சரி வாங்க காடு பாடலில் உள்ள மனப்பாட பாட்டு மற்றும் வினா விடைகளை தெரிந்து கொள்ளலாம்.

காடு பாடல் ஏழாம் வகுப்பு (ஏழாம் வகுப்பு தமிழ் வினா விடை)

கார்த்திகை தீபமெனக்
காடெல்லாம் பூத்திருக்கும்
பார்த்திட வேண்டுமடீ – கிளியே
பார்வை குளிருமடீ!

காடு பொருள்கொடுக்கும்
காய்கனி ஈன்றெடுக்கும்
கூடிக் களித்திடவே – கிளியே
குளிர்ந்த நிழல் கொடுக்கும்

குரங்கு குடியிருக்கும்
கொம்பில் கனிபறிக்கும்
மரங்கள் வெயில்மறைக்கும் – கிளியே
வழியில் தடையிருக்கும்

*பச்சை மயில் நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சர வங்கலங்கும் – கிளியே
நரியெலாம் ஊளையிடும்

அதிமது ரத்தழையை
யானைகள் தின்றபடி
புதுநடை போடுமடி – கிளியே
பூங்குயில் கூவுமடி

சிங்கம் புலிகரடி
சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும் திரியுமடி – கிளியே
இயற்கை விடுதியேலே*

                              —சுரதா

ஏழாம் வகுப்பு காடு வினா விடை (Samacheer Kalvi 7th Tamil Solutions)

சொல்லும் பொருளும் – 7th Standard Tamil Unit 2 Book Back Answers:

  1. ஈனறு – பெற்று
  2. களித்திட – மகிழ்ந்திட
  3. கொம்பு – கிளை
  4. நச்சரவம் – விடமுள்ள பாம்பு
  5. அதிமதுரம் – மிகுந்த சுவை
  6. விடுதி – தங்கும் இடம்

ஏழாம் வகுப்பு காடு மதிப்பீடு | Samacheer Kalvi 7th Tamil Book Solutions

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. வாழை, கன்றை ________.

அ) ஈன்றது
ஆ) வழங்கியது
இ) கொடுத்தது
ஈ) தந்தது

விடை:  ஈன்றது

2. ‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

அ) காடு + டெல்லாம்
ஆ) காடு + எல்லாம்
இ) கா + டெல்லாம்
ஈ) கான் + எல்லாம்

விடை: காடு + எல்லாம்

3. ‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

அ) கிழங்கு எடுக்கும்
ஆ) கிழங்கெடுக்கும்
இ) கிழங்குடுக்கும்
ஈ) கிழங்கொடுக்கும்

விடை: கிழங்கெடுக்கும்

நயம் அறிக – ஏழாம் வகுப்பு இயல் இரண்டு காடு:

  1. பாடலிலுள்ள மோனை , எதுகை , இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனைச் சொற்கள்:

கார்த்திகை – காடெல்லாம்
பார்த்திட – பார்வை
காடு – காய்கனி
குரங்கு – குடியிருக்கும்
ச்சை – ன்றி
சிங்கம் – சிறுத்தை

எதுகைச் சொற்கள்:

கார்த்திகை – பார்த்திட – பார்வை
ளித்திடவே – குளிர்ந்திடவே
குங்கு – மங்கள்
சிங்கம் – எங்கும்

இயைபுச் சொற்கள்:

பொருள்கொடுக்கும் – ஈன்றெடுக்கும் – நிழல் கொடுக்கும்
குடியிருக்கும் – தடையிருக்கும்

காடு ஏழாம் வகுப்பு வினா விடை

குறுவினா:

1. காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?

காட்டுப்பூக்களுக்கு கார்த்திகை விளக்கை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்

2. காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?

  • காட்டில் உள்ள மலர்களைக் காணும் போது கண்கள் குளிர்ச்சி பெறும்.
  • காடு பலவகையான பொருள்களையும் காய்கனிகளையும் தரும்.
  • எல்லோரும் சேர்ந்து மகிழ்ந்திட குளிர்ந்த நிழல் தரும்.
  • காட்டு விலங்குகளுக்கு உணவாக கனி தரும்.

சிறுவினா

1.‘காடு’ பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.

  • பன்றிகள் காட்டிலுள்ள கிழங்கை தோண்டி உண்ணும்,
  • நரிக்கூட்டம் ஊளையிடும்.
  • மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்
  • இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்

கூடுதல் வினாக்கள் (7th Standard Tamil Unit 2 Question Answer)

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இராசகோபாலன் என்ற இயற்பெயர் கவிஞர் __________________

விடை: சுரதா

2. கார்த்திகை விளக்குள் போன்று இருந்தவை __________________

விடை: மலர்கள்

3. ____________, ____________ நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தரும்

விடை: காடும், கடலும்

4. ____________ வளமே நாட்டின் வளம்

விடை: காட்டின்

வினாக்கள் – ஏழாம் வகுப்பு காடு கொஸ்டின் ஆன்சர்:

1. கவிஞர் சுரதா பற்றி குறிப்பு எழுதுக

  • சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் பாரதாசனின் மீது பற்று கொண்டவர். பாரதிதாசனின் இயற்பெயர் ‘சுப்புரத்தினம்’. எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்காெண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும். உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் எனறும் அழைப்பர். அமுதும் தேனும், தேன் மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

2. கிளிக்கண்ணி என்றால் என்ன?

  • கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை ‘கிளிக்கண்ணி’ ஆகும்.

3. ஒரு நாட்டின் வளம் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?

  • ஒரு நாட்டின் வளம், அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது. அதனால் தான் “காட்டின் வளமே நாட்டின் வளம்” என அறிஞர்கள் கூறுகின்றனர்.

4. சுரதா எனப் பெயர் வரக்காரணம் என்ன?

  • சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் பாரதாசனின் மீது பற்று கொண்டவர். பாரதிதாசனின இயற்பெயர் ‘சுப்புரத்தினம்’. எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்காெண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும்.

5. உவமைக் கவிஞர் பெயர்காரணம் கூறுக

  • உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் எனறும் அழைப்பர்.

7. சுரதாவின் படைப்புகள் யாவை?

  • தேன் மழை
  • துறைமுகம்
  • அமுதும் தேனும்
தொடர்புடைய பதிவுகள் (ஏழாம் வகுப்பு இயல் 1)
ஏழாம் வகுப்பு எங்கள் தமிழ் வினா விடைகள்
ஏழாம் வகுப்பு ஒன்றல்ல இரண்டல்ல பாடம்
ஏழாம் வகுப்பு சொலவடைகள் வினா விடை
ஏழாம் வகுப்பு இயல் 1 பேச்சு மொழியும் எழுத்து மொழியும்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement