வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஏழாம் வகுப்பு இயல் 2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் | Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2

Updated On: December 23, 2025 6:13 PM
Follow Us:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2
---Advertisement---
Advertisement

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் வினா விடை | Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2

வணக்கம் நண்பர்களே இன்றைய கல்வி சார்ந்த பகுதியில் ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 2 புத்தகத்தில் உள்ள அப்படியே நிற்கட்டும் அந்த மரம் பாடத்தில் இருக்கும் வினா விடைகளை படித்து தெரிந்து கொள்ளலாம். இணையவழி கல்வியில் பாடம் படிக்கும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க அப்படியே நிற்கட்டும் அந்த மரம் வினா விடைகளை படித்து அறிந்து கொள்ளலாம்.

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் Book Back Answers

சொல்லும் பொருளும்:

  1. பரவசம் – மகிழ்ச்சிப் பெருக்கு
  2. துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _____.

அ) பச்சை இலை
ஆ) கோலிக்குண்டு
இ) பச்சைக்காய்
ஈ) செங்காய்

விடை : கோலிக்குண்டு

2. ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை _____.

அ) ஒட்டிய பழங்கள்
ஆ) சூடான பழங்கள்
இ) வேக வைத்த பழங்கள்
ஈ) சுடப்பட்ட பழங்கள்

விடை : ஒட்டிய பழங்கள்

3. ‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) பெயர + றியா
ஆ) பெயர் + ரறியா
இ) பெயர் + அறியா
ஈ) பெயர + அறியா

விடை : பெயர் + அறியா

4. ‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) மன + மில்லை
ஆ) மனமி + இல்லை
இ) மனம் + மில்லை
ஈ) மனம் + இல்லை
விடை : மனம் + இல்லை

5. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) நேற்று இரவு
ஆ) நேற்றிரவு
இ) நேற்றுரவு
ஈ) நேற்இரவு
விடை : நேற்றிரவு


குறுவினா – அப்படியே நிற்கட்டும் அந்த மரம் பாடம்:

1. நாவல் மரம் எத்தனை தலை முறைகளாக அங்கு நின்றிருந்தது?

நாவல் மரம் இரண்டு தலை முறைகளாக அங்கு நின்றிருந்தது

2. சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?

  1. காக்கை
  2. குருவி
  3. மைனா
  4. பெயரறியாப் பறவைகள்
  5. அணில்
  6. காற்று

சிந்தனை வினா:

1.பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை ?

கவிஞருடைய தாத்தாவின் தாத்தா காலத்தில் நடப்பட்ட நாவற்பழ மரத்தின் நிழலில் கவிஞரின் மகனும் விளையாடியுள்ளான்.

ஆறு தலைமுறைகளாக அங்கு நின்றிருந்த அந்த மரத்தில் கருநீலக் குண்டுகளாக நாவற்பழம் தொங்குவதைப் பார்த்தவுடனேயே நாவில் நீருறும். காக்கை, குருவி, மைனா, கிளிகள் மற்றும் பெயரறியாப் பறவைகள், அணில்கள் ஆகியவற்றிற்கு வாழ்விடமாக இருந்தது அந்த மரம். மேலும் அவைகளுக்கு மட்டுமல்லாமல், இரவில் வந்த வௌவால் கூட்டங்களுக்கும் உணவளித்தது அந்த மரம்.

தோப்பு முழுவதும் பரவி கிடந்த மரத்தின் நிழல் ஆனது, அப்பா புளியமிளாரை எடுத்து அடிக்க வருவார். இந்த மாதிரியான சுவாரசியங்களை கவிஞரால் மறக்க முடியவில்லை. இப்படி பெருவாழ்வு வாழ்ந்த அந்த மரமானது ஒரு நாள் வேரோடு சாய்ந்து விட்டது. இந்த மரத்தினை பார்க்க ஊர்மக்கள் சென்றார்கள். கவிஞரின் மனதில் இந்த மரத்தினை பற்றிய நினைவுகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த மரமானது இவரை பொறுத்தவரையில் விழவில்லை. அந்த விழுந்த மரத்தினை பார்க்கவும் அவைர விரும்பவில்லை.

ஏழாம் வகுப்பு காடு வினா விடை


சிறுவினா – அப்படியே நிற்கட்டும் அந்த மரம்:

1.நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை ?

  • ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்போது பார்க்கின்ற போதும், தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கிறது.
  • அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.
  • பளபளக்கும் பச்சை இலைகளுடன் கருநீலக்கோலிக்குண்டுகள் போல் நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.
  • காக்கை, குருவி, மைனா, பெயரறியாப் பறவைகள், அணில், காற்று அகியன உதிர்த்து விடும் நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
    தங்கைகள் தங்கள் அக்காகளுக்காக கையில் பெட்டியுடன் நாவல் பழம் பொறுக்குகின்றனர்.
  • இரவின் மெல்லிய நிலா வெளிச்சத்தில் பழந்தின்னி வெளவால் கூட்டம் மரத்தில் பழம் தின்னப் படை எடுக்கும்.
  • அப்பா வரும் வரை நாவல் மர நிழலில் கிளியாந்தட்டு விளையாடுவோம். நேற்று நண்பகல் என் மகன் விளையாடியதும் இந்த நாவல் மர நிழலில் தான்


கூடுதல் வினாக்கள் (7th Standard Tamil Book Term 1 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் Solution Lesson 2.2)

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சிறந்த கவிதைகளைத் தொகுத்த கொங்குதேர் வாழ்க்கை என்னும் நூல் படைத்த கவிஞர் _____________________

விடை : ராஜமார்த்தாண்டன்

2. ஊரின் வடகோடியில் இருந்த மரம் _____________________

விடை : நாவல் மரம்

3. இரவில் படையெடுத்து வரும் பழந்தின்னி _____________________

விடை : வெளவால் கூட்டம்

4. நெறி எனும் சொல்லின் பொருள்

விடை:  கொள்கை

5. வான்+ஒலி என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

விடை: வானொலி

6. ________________ நம் அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும்

விடை : தமிழ்மொழி

7.எங்கள் தமிழ் மொழி ________________ போன்ற மொழியாகும்.

விடை : தேன்



பிரித்து எழுதுக:

  1. தானிருந்து = தான் + இருந்து
  2. கருநீலம் = கருமை + நீலம்
  3. பெயரறியா = பெயர் + அறியா
  4. நிலவொளி = நிலவு + ஒளி
  5. பழந்தின்னி = பழம் + தின்னி
  6. நேற்றிரவு = நேற்று + இரவு
  7. மனமில்லை = மனம் + இல்லை


குறுவினா:

1. நாவல்மரம் தோற்றம் குறித்துக் கவிஞர் கூறுவன யாவை

  • ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்போது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கிறது.

2. சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்க காரணம் யாது?

  • அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.

3. கவிஞர் ராஜமார்த்தாண்டன் – குறிப்பு வரைக

  • ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர். காெல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்.
  • ராஜமார்த்தாண்டன் கவிதைகள் எனனும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர். சிறந்த தமிழ்க கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்.
தொடர்புடைய பதிவுகள் (ஏழாம் வகுப்பு இயல் 1)
ஏழாம் வகுப்பு எங்கள் தமிழ் வினா விடைகள்
ஏழாம் வகுப்பு ஒன்றல்ல இரண்டல்ல பாடம்
ஏழாம் வகுப்பு சொலவடைகள் வினா விடை
ஏழாம் வகுப்பு இயல் 1 பேச்சு மொழியும் எழுத்து மொழியும்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Samacheer Kalvi 8th Tamil Book Solutions Term 1 Chapter 1.5

எட்டாம் வகுப்பு தமிழ் பாடம் எழுத்துக்களின் பிறப்பு வினா விடைகள் | Samacheer Kalvi 8th Tamil Book Solutions Term 1 Chapter 1.5

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5

ஏழாம் வகுப்பு குற்றியலுகரம் குற்றியலிகரம் வினா விடை | Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5

easy spoken english to tamil

ஸ்போக்கன் இங்கிலீஷ் தமிழ் | Spoken English in Tamil

கடைசி நேரத்தில் எப்படி தேர்வுக்கு தயாராவது | Last Minute Exam Tips in Tamil

7th Tamil Book Back Question and Answers Unit-2 Chapter 2.5

ஏழாம் வகுப்பு தமிழ் நால்வகை குறுக்கங்கள் | Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.5

Samacheer Kalvi 8th Maths Book Solutions Exercise 1.1

எட்டாம் வகுப்பு கணிதம் வினா விடை | Samacheer Kalvi 8th Maths Book Solutions Exercise 1.1

samacheer kalvi 7th tamil solutions term 1 chapter 1.3

ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 1 பேச்சு மொழியும் எழுத்து மொழியும் | Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3

bsc information technology course details in tamil

Bsc Information Technology படிப்பு பற்றிய தகவல்கள்..!

B.sc Biotechnology பட்டப்படிப்பை படிப்பதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!