செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் திருக்குறள் பொருள்

Selvathul Selvam Seviselvam Thirukkural

Selvathul Selvam Seviselvam Thirukkural

தமிழில் உள்ள நூல்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த நூல் திருக்குறள் ஆகும். இந்த திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் ஆகும். குறிப்பாக இவற்றில் மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கிய அங்கமான அறம், தர்மம், பொருள், இன்பம், காமம் ஆகியவற்றை பற்றிய விளக்கங்களை கொண்ட ஒரு நூலாகும். இந்த திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் என்றும் சில சிரிப்புப்பெயர்களால் அழைப்பர். சரி இந்த பதிவில் செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் திருக்குறள் பொருளை பற்றி படித்தறிவோம்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் திருக்குறள் பொருள்

குறள் 411:

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை

மு.வ விளக்க உரை:

செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம் இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

கலைஞர் விளக்க உரை:

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

குறள் விளக்கம்:

ஒருவர் சேர்த்துள்ள செல்வங்களிலேயே தலையான செல்வமாக கருதப்படுவது, அவர் தன் செவி வழியாக சேர்த்துள்ள அறிவாகிய செல்வமாகும்.

தொடர்புடைய பதிவு:
திருக்குறள் பற்றிய சிறப்பு கட்டுரை
திருக்குறள் சிறப்புகள்
10 எளிமையான திருக்குறள்
20 எளிமையான திருக்குறள்
50 easy thirukkural in tamil
கல்வி திருக்குறள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com