What is SETC Full Form in Tamil
பொதுவாக நமது அன்றாட வாழ்க்கையில் தினமும் பலவகையான தகவலைகளை அறிந்து கொள்ள நினைப்போம். அதேபோல் தினமும் நம்மை சுற்றி அல்லது நமது உலகில் என்னென்ன நடக்கின்றது என்பதை பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்ள நினைப்போம். ஆனால் நம்மால் ஓரளவு செய்திகள் மற்றும் தகவல்களை மட்டும் தான் அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வளவு ஏன் நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அல்லது கேள்விப்படும் வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் அல்லது விரிவாக்கம் என்ன என்பது நமக்கு தெரிந்திருக்காது.
அதாவது நீங்கள் ஒரு வார்த்தையை சுருக்கமான முறையில் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதற்கான முழுவிளக்கமும் நமக்கு தெரியாது. அப்படி நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது கேள்விப்படும் ஒரு வார்த்தையான SETC என்பதற்கான சரியான விரிவாக்கம் மற்றும் அதனை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
SETC Full Form in Tamil:
SETC என்பதற்கான ஆங்கில மொழி விரிவாக்கம் State Express Transport Corporation என்பது ஆகும். இதனை தமிழ் மொழியில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் என்று அழைக்கப்படுகிறது.
SETC என்றால் என்ன..?
SETC என்பது ஒரு அரசுக்கு சொந்தமான போக்குவரத்து கழகம் ஆகும். இது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும்.
SETC வரலாறு:
இந்த SETC தமிழ்நாடு அரசால் 1975-இல் தொலைதூர விரைவு சேவைகளை இயக்குவதற்கு பிரத்தியேகமான ஒரு தனி நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இந்த சேவையானது 15 செப்டம்பர் 1975 முதல் பல்லவன் போக்குவரத்து கழகத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட விரைவு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அதன் பிறகு ஜனவரி 1980 மற்றும் தமிழ் கவிஞர் திருவள்ளுவரின் நினைவாக திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் (TTC) என மறுபெயரிடப்பட்டது. அடுத்து 1990 களில், JJTC உருவாக்கப்பட்டது, இது முந்தைய TTC இன் மாநிலங்களுக்கு இடையேயான வழித்தடங்களை இயக்கியது. JJTC பின்னர் 1996 இல் RGTC என மறுபெயரிடப்பட்டது. TTC மற்றும் RGTC இரண்டும் 1997 இல் மாநில விரைவு போக்குவரத்து கழகத்தில் (SETC) இணைக்கப்பட்டன.
சேவைகளின் வகைகள்:
- அல்ட்ரா டீலக்ஸ்
- கிளாசிக்
- நான்-ஏசி ஸ்லீப்பர்
- ஏசி அல்லாத ஸ்டீட்டர் கம் ஸ்லீப்பர்
- ஏசி இருக்கை
- ஏசி ஸ்லீப்பர்
- ஏசி சீட்டர் கம் ஸ்லீப்பர்
முன்பதிவு:
பொதுவாக SETC அதன் அனைத்து வழிகளிலும் முன்பதிவு சேவையினை வழங்குகிறது. அதாவது நீங்கள் பயணம் செய்ய போகும் பயணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்ய வேண்டும்.
நீங்கள் ஆன்லைன் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் உள்ள SETC கவுன்டர்களில் நீங்கள் உங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
TNSTC என்பதன் விரிவாக்கம் தெரியுமா
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |