Ten Line About Jawaharlal Nehru
இன்றைய பதிவில் ஜவஹர்லால் நேரு பற்றிய பத்து வரிகளை பற்றி பார்க்க போகிறோம். இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கும் அரும்பாடு பட்டவர்களுள் ஜவஹர்லால் நேருவும் ஒருவராவார். இந்திய நாட்டின் முதல் பிரதமர் என்ற பெருமை இவரையே சேரும். குழந்தைகளுக்கு நேரு என்றால் மிகவும் பிடிக்கும். இவருடைய பிறந்தநாளை தான் குழந்தைகள் தின விழாவாக வருடந்தோறும் நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், “நவீன இந்தியாவின் சிற்பி” எனவும் ஜவஹர்லால் நேரு அழைக்கப்படுகிறார்.
மேலும், ஜவஹர்லால் நேரு அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆவர். இவர் முக்கிய சுதந்திர போராட்ட வீரர் மற்றும் மகாத்மா காந்தியின் உதவியாளர். பண்டிதர் ஜவஹர்லால் நேரு சுதந்திர போராட்டத்தின் தீவிர உறுப்பினராக இருந்தார் மற்றும் இவர் அகிம்சை வழியை பின்பற்றினார். அவர் குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டிருந்ததால் அந்த நாளே குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஜவஹர்லால் நேரு பற்றிய பேச்சு போட்டி | Jawaharlal Nehru Speech in Tamil..!
Jawaharlal nehru pattriya 10 varikal :
1.ஜவஹர்லால் நேரு நவம்பர் 14-ம் தேதி, 1889 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பிறந்தவர்.
2.தனியார் ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி தனது கீழ் வீட்டிலையே தனது ஆரம்ப கல்வியை முடித்தார்.
3.கேம்ப்ரிட்ஜ் மற்றும் ட்ரினிட்டி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், 1912ல் இன்னர் டெம்பிலில் சட்டம் பயில பதிவு செய்துக்கொண்டார். 1962 ல், வெற்றிகரமாக சட்டப் படிப்பை முடித்த நேரு தனது சட்டப் பணியைத் தொடங்க இந்தியா திரும்பினார்.
4.அவர் தொழிலால் ஒரு வழக்கறிஞர் ஆனார், ஆனால் விதி அவரை சுதந்திர போராட்டத்தை நோக்கி ஈர்த்தது.
5.தேச கட்டுமான செயல்பாட்டில் நேரு உறுதியான நம்பிக்கையை கொண்டிருந்தார்.
6.அவரது காஷ்மீர் பண்டிட் சமூக வேர்கள் காரணமாக, அவர் பெரும்பாலும் பண்டிட் நேரு’என்று அழைக்கப்படுகிறார்.
7.மகாத்மா காந்தியுடன் சேர்ந்து சுதந்திர ‘போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார்.சிறந்த கிராமப்புறத் திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார்.
8.காந்தியை போலவே நேரும் அகிம்சை வழியை பின்பற்றினார். அவர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார்.
9.பண்டிதர் ஜவஹர்லால் நேரு மதசார்பின்மை மற்றும் சமய நல்லிணக்கத்தை ஆதரித்தார். அவரது பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
10.குழந்தைகளை அதிகம் நேசிப்பதால் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டம், உணவு வழங்கும் திட்டம், கல்வி திட்டம் போன்றவற்றை நடைமுறைப்படுத்தினார்.
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |














