Thalla Vilayum Thirukkural
உலக பொதுமறை நூலாக சிறந்து விளங்குவது திருக்குறள். திருக்குறளில் மொத்தம் 1330 குறட்பாக்களும் 133 அதிகாரங்களும் அடங்கியுள்ளது. திருவள்ளுவர் நமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துக்களையம் குறள் மூலம் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவர் இயற்றிய ஒவ்வொரு குறளிலுமே அற்புதமான கருத்துக்கள் ஒளிந்திருக்கிறது. இந்த குறளானது இரண்டு அடிகளில் இருக்கும், ஆனாலும் இதில் நமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் கூறியுள்ளார். இந்த பதிவில் தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு குறளின் விளக்கத்தை அறிந்து கொள்வோம்.
குறள்:731 | பொருட்பால்:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு
மனிதன் வாழ்வதற்கு உணவு அடிப்படை தேவையாகும். ஆண்டு தோறும் மக்கள் செல்வம் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஆதலால் மக்களுக்கு தேவையான அளவு உணவை தளர்ச்சியில்லாமல் குறைவில்லாமல் உற்பத்தி செய்யும் நாடே நாடு. உணவிற்கு மற்ற நாட்டை நம்பி இருக்கும் நாடு நாடே அல்ல.
மனிதருக்கு கல்வி என்பது அவசியமானது, அனைவரும் கற்கவில்லை என்றால் நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்வதற்கு கற்றவர்கள், சான்றோர்கள், மேன்மக்கள் மிக தேவைப்படுவார்கள்.
செல்வமானது குறைவில்லாமல் இருத்தல் வேண்டும். ஆனால் தாழ்வில்லா செல்வம் என்று திருவள்ளுவர் சொல்லுவது நற்வழியில் ஈன்ற செல்வமாகும். அற நிலையில் இருந்து கெடாமல் ஈன்ற செல்வமாகும். (போர்) குற்றம் புரியாமல் ஈன்ற செல்வமாகும். செல்வம் ஈன்ற வழியினை அவமானம் இல்லாமல் வெளிப்படையாக கூறும் முறையில் ஈன்ற செல்வமாகும்.
இந்த மூன்றும் நாட்டிற்கு தேவையான ஒன்றாயு என்று இந்த குறள் மூலம் விளக்கியுள்ளார்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.
கலைஞர் உரை:
செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாக இருக்கும்.
மு. வ. உரை:
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
திருக்குறள் பற்றிய சிறப்பு கட்டுரை |
திருக்குறள் சிறப்புகள் |
10 எளிமையான திருக்குறள் |
20 எளிமையான திருக்குறள் |
கல்வி திருக்குறள் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |