திரிகடுகம் பாடல்கள் மற்றும் விளக்கம்
இன்றைய பதிவில் திரிகடுகம் பாடல்கள் மற்றும் விளக்கம் பற்றி பார்க்க போகிறோம். புத்தகத்தில் திரிகடுகம் பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். திரிகடுகமானது தமிழில் சிறந்து விளங்கும் நூலாகும். திரிகடுகமானது மூன்று மூலிகை பொருட்களை உள்ளடக்கியது. உடலுக்கு எந்த ஒரு தீங்குகளும் இல்லாமல் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவேண்டும் என்பதற்காக இந்த பாடல்களின் கருத்து அமைந்துள்ளது. இது பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும், TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களும் மிகவும் பயன்படும்.
மேலும், திரிகடுகம் என்பது பண்ணேண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.இதனை நல்லதனார் இயற்றியுள்ளார்.சுக்கு , மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மருத்துவ பொருள்கள் உடலை நல்வழிப்படுத்துவதுபோல, ஒவ்வொரு பாடலிலும் உள்ள மூன்று அறக்கருத்துகள் மனதின் அறியாமையை நீக்கி வாழ்க்கையை செம்மையாக்கும் என்பதன் அடிப்படையில் இப்பெயர் பெற்றது. அந்த வகையில் இந்த பதிவில் திரிகடுகம் பாடல்கள் மற்றும் விளக்கம் பற்றி பார்க்கலாம் வாங்க…
திரிகடுகம் என்றால் என்ன?
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று பொருள்களை குறிக்கும். இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
பாடல்-01
அருந்ததி கற்பினூர் தோளும், திருந்திய
தொல் குடியில் மாண்டார் தொடர்ச்சியும், சொல்லின்
அரில் அகற்றும் கேள்வியார் நட்பும்-இம் மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து…
விளக்கம்:
அருந்ததி போன்ற கற்புடைய பெண்ணின் தோளும், நல்ல குடியில் தோன்றிய பெருமை உடையவரது நட்பும், சொற்களினிடத்தே குற்றங்களே அகற்றும் கேள்வி உடையவரது நட்பும் இன்மூன்றும் திரிகடுகம் போன்று சிறந்தது.
பாடல் -02
தன் குணம் குன்றுத் தன்மையும், தா இல் சீர்
இன் குணத்தார் ஏவின செய்தலும், நன்கு உணர்வின்’
நான் மறையாளர் வழிச் செலவும் -இம் மூன்றும்
மேல் முறையாளர் தொழில்…
விளக்கம்:
தனது குடிப்பிறப்பின் சிறப்பு குறையாத ஒழுக்கமும், இனிய குணத்தையுடையோர் ஏவிய தொழில்களை செய்வதும், வேதங்கள் கூறிய வழியில் நடத்தலும், மேன்மையானவர் செய்யும் தொழில்களாகும்.
பாடல்:03
கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளை கோலால் புடைத்தலும்,இல்லம்
சிரியாரைக் கொண்டு புகழும்-இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு
விளக்கம் :
கற்றறியாதவருடன் நட்பாய் இருப்பதும்,கற்புடை மனைவியை அடித்தலும்,
சிற்றறிவினரை தம் வீட்டுக்குள் சேர்ப்பதும், அறியாமைனுள் விளைகின்ற கேடுகளாகும்.
பாடல் :04
பகை முன்னர் வாழ்க்கை செயலும்,தொகை நின்ற
பெற்றத்துள் கோல் இன்றி சேறலும், முன் தன்னைக்
காய்வானைக் கை வாங்கி கோடலும்- இம் மூன்றும்
சாவ உருவான் தொழில்
விளக்கம்:
பகைவருக்கு முன்னே தன் செல்வத்தைக் காட்டுவதும்,மாட்டு மந்தையில் கோல் இல்லாமல் செல்வதும்,பகைவரோடு நட்பு பாராட்டுவதும் கெடுதியை உண்டாக்கும்.
பாடல் :05
வழங்காத் துறை இழிந்து நீர் போக்கும், ஒப்ப
விழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து
விருந்தினை வேற்றூர் புகழும்-இம் மூன்றும்
அருந் துயரம் காட்டும் நெறி
விளக்கம்:
பழகாத துறையில் இறங்கி போதலும், விருப்பமில்லாத பெண்ணை சேர்வதும், வருந்தி பிறருக்கு விருந்தாளியாவதும் துயரத்தை தரும்.
| மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |














