வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தொட்டனைத் தூறும் மணற்கேணி | Thottanaithoorum Manarkeni In Tamil 

Updated On: November 28, 2025 1:05 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Thottanaithoorum Manarkeni In Tamil

இன்றைய பதிவில் தொட்டனைத் தூறும் மணற்கேணி திருக்குறள் விளக்கம் பற்றி பார்க்க போகிறோம். தமிழில் சிறப்பு வாய்ந்த நூல்கள் பல இருந்தாலும் மிகவும் போற்றுதலுக்குரிய நூல் என்றால் அது திருக்குறள் தான். திருக்குறளில் மொத்தம் 1330 குறட்பாக்களும் 133 அதிகாரங்களையும் கொண்டுள்ளது. திருக்குறளில் உள்ள கருத்துக்கள் யாவும் அக்காலத்தில் உள்ள மக்களுக்கும், இக்காலத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைக்கு பொருந்துவதாக இருக்கின்றன. 

திருக்குறள் வாழ்வியலுக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் கொண்டதாக காணப்படுகிறது. உலக பொதுமறையாக திருக்குறள் கருதப்படுகிறது. 1330 குறளும் ஒரு கருத்தை பயின்றே வருகிறது. திருக்குறளை கற்பது முக்கியம் என பள்ளி மாணவர்களுக்கு அறிவுத்தப்படுகிறது. திருக்குறள் 2 அடியில் இருந்தாலும் சில குறட்பாக்களை கற்பது கடினமகவே காணப்படுகிறது.அந்த வகையில் தொட்டனைத் தூறும் மணற்கேணி திருக்குறள் விளக்கம் பற்றி  பார்க்கலாம் வாங்க….

குறள்:

தெய்வப் புலவர்".. முழு காவி உடையில் திருவள்ளுவர்.. பாஜக அண்ணாமலை சொன்ன  வாழ்த்து! கவனிச்சீங்களா? | Tamil Nadu BJP chief Annamalai posts  Thiruvalluvar with Safforn shawl ...

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. 

  1. குறள் எண் –396
  2. பால் – பொருட்பால் 
  3. இயல் – கல்வியியல் 
  4. அதிகாரம் – அறிவின் பெருக்கம் 

பொருள்: ஆற்று மணலை தோண்ட தோண்ட நீர் பெருகும், அது போல அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

புலியூர் கேசியின் விளக்கம்:

மணலில் தோன்றும் கிணற்றில், தோண்டிய அளவுக்கே நீர் ஊறும்  மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்றதன் அளவுக்கே அறிவும் ஊறி சுரக்கும். 

மு. வரதராசன் :

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக்  கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும் .

 சாலமன் பாப்பையா : 

மணலில் தோண்டிய அளவு சிறு கிணற்றில் நீர் ஊறும், மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும். 

மு. கருணாநிதி :

தோண்டகத்  தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது  போலத்  தொடர்ந்து படிக்கப்  படிக்க   அறிவு பெருகி கொண்டே இருக்கும். 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை:

மணலில் தோண்டிய நீர் கிடங்கில்  தோண்டிய அளவிற்கு நீரூரும் ; அதுபோல் மக்கட்குக்  கல்விகற்ற  அளவிற்கு அறிவூறும்.

அன்பும் அறனும் திருக்குறள் | Anbum Aranum Thirukkural

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

 

Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now