Lose Marks in Exam in Tamil
நீங்கள் பள்ளி படித்தாலும் சரி, கல்லூரி படித்தாலும் சரி ஏதாவது போட்டி தேர்விற்கு Prepare செய்து கொண்டிருப்பவராக இருந்தாலும் சரி நீங்கள் ரிசல்ட்டை பெறுவதற்கு முக்கியமாக இருப்பது தேர்வு தான். இந்த தேர்வில் நீங்கள் படித்தில் இருந்து கேள்விகள் வந்திருந்தால் அதற்கான பதில்களை தெரிவிப்பீர்கள். ஆனால் அதில் சில தவறுகளை செய்து விடுகிறீர்கள். இந்த தவறுகள் உங்களின் மதிப்பெண் குறைவதற்கு காரணமாக இருக்கிறது. அது என்னென்ன தவறுகள் என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
தேர்வில் செய்ய கூடாத தவறுகள்:
Exam-க்கு முன்னடி படிப்பது:
கேள்வி பேப்பர் வந்ததும் கேள்விகளை படித்து விட்டு பதில்களை எழுதும் போது சில கேள்விகளுக்கு பதில் தெரியும். அதாவது அந்த கேள்விக்கான பதிலில் உள்ள கடைசி வார்த்தை மற்றும் நடுவில் உள்ள வார்த்தை போன்றவை ஞாபகம் இருக்கும். ஆனால் முதல் வார்த்தை ஞாபகம் இருக்காது.
இதற்கு என்ன காரணம் என்றால் Exam அறைக்கு செல்வதற்கு முன்னால் இந்த கேள்வியை படிக்கவில்லை என்று அவசரம் அவசரமாக படிப்பீர்கள். இதனால் நன்றாக படித்ததை கூட ஞாபகம் வைத்து கொள்ளாமல் போகிவிடும். அதனால் இனிமேல் தேர்வறைக்கு முன்னால் படிப்பதை நிறுத்தி விடவும். தேர்வுக்கு செல்லும் போது மனதை அமைதியாக வைத்து செல்லவும்.தேர்வறையில் மறந்த பதிலை மறுபடியும் மறுபடியும் ஞாபக படுத்த முயற்சிக்காதீர்கள். மற்ற கேள்விக்கான பதிலை எழுத வேண்டும்.
கலந்துரையாட வேண்டாம்:
நீங்கள் தேர்வறைக்கு செல்வதற்கு முன்னடி நண்பர்களிடம் என்ன படித்தாய் என்று பேசி கொள்வீர்கள். அப்படி பேசும் உங்கள் நண்பர் இந்த கேள்வி ரொம்ப முக்கியமானது நீ படித்தாயா என்று கேட்பார்கள் நீங்கள் அந்த கேள்வியை படிக்கவில்லை என்றால் பதற்றம் அடைவீர்கள். மேலும் தேர்வு எழுதி வெளியே வந்த பிறகு நண்பர்களிடம் கேள்விக்கான பதிலை பேசி கொள்வீர்கள். நீங்கள் எழுதிய பதில் அதில் தப்பு என்றால் பதற்றம் அடைந்து அதயே நினைத்து கொண்டிருப்பீர்கள். அதனால் இந்த இரண்டையும் தவிர்த்து விடவும்.
இதை மட்டும் பண்ணுங்க, எத்தனை வருடமானாலும் படித்தது மறக்காது..!
உணவை குறைத்து கொள்ள வேண்டும்:
தேர்வு நடக்கும் பொழுது வயிறு முழுவதுமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மற்றும் எண்ணெய் சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனால் வயிற்று போக்கு ஏற்பட்டு தேர்வு சரியாக எழுத முடியாமல் போகலாம்.கேள்வியை படிக்க வேண்டும்:
கேள்வியை படிப்பதற்கு தனியாக நேரம் கொடுப்பார்கள். அப்பொழுது கேள்வியை படிக்கும் போது இந்த கேள்விக்கான இது தான் பதில் என்று நினைத்து கொள்ளாதீர்கள்.
அடுத்து கேள்வியை படித்து போது இரண்டு கேள்விகள் கொடுத்து ஒரு கேள்வி எழுத சொன்னால் அதில் எந்த கேள்விக்கான பதில் தெரியுமோ அதை தேர்வு செய்யுங்கள்.
கேள்வியை படித்து முடித்த உடனே பதில் எழுத ஆரம்பிக்காதீர்கள். ஒரு 5 நிமிடம் மூச்சை இழுத்து வெளியே விடவும்.
தேர்வு எழுதிய பிறகு செய்ய வேண்டியது:
தேர்வு எழுதிய பிறகு கடைசியாக உள்ள நிமிடத்தில் எழுதியதை சரியாக எழுதிக்கிறீர்களா என்று பார்க்க சொல்வார்கள். ஆனால் அதையும் சரியாக செய்வதில்லை. எப்படி தெரியுமா.? கேள்விக்கான வினா எண் சரியாக போற்றுக்கோமா என்று மட்டும் தான் பார்ப்போம். இதை மட்டும் பார்க்க கூடாது. நீங்கள் எழுதிய வார்த்தைகளில் ஏதாவது பிழை உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
நன்றாக தூங்க வேண்டும்:
நீங்கள் தேர்வு நேரத்தில் இரவு நன்றாக தூங்க வேண்டும். அப்போது தான் மறுநாள் தேர்வை நன்றாக எழுத முடியும்.
Tet Exam பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |