Ulluvathellam Uyarvullal Thirukkural
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் திருக்குறள் பற்றியும், அதற்கான விளக்கம் பற்றியும் பின்வருமாறு கொடுத்துள்ளோம். திருக்குறள் மொத்தம் 1330 இருக்கிறது. அவற்றில் ஒரு சில மட்டுமே தெரியும். அதிலும், திருக்குறள் தெரிந்தாலும் அதற்கான விளக்கம் பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அந்த வகையில் நீங்கள் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் திருக்குறள் பற்றியும், அதன் விளக்கம் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார். இன்று நாம் பார்க்கப் போகும் குறள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என தொடங்கும் திருக்குறளின் விளக்கத்தை இங்கு நாம்படித்து தெரிந்து கொள்வோம்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் திருக்குறள்
குறள் எண் – 596
பால் – பொருட்பால்
இயல் – அரசியல்
அதிகாரம் – ஊக்கம் உடைமை
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
திருக்குறள் சிறப்புகள் |
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் திருக்குறள் விளக்கம்:
- எப்பொழுதும் (அரசன், தலைவன்) எண்ணுவது எல்லாம் உயர்ந்த எண்ணங்கள் ஆக மட்டுமே இருக்க வேண்டும். அத்தகைய எண்ணங்கள் சில நேரம் கை கூடி நல்ல பலன்களை அளிக்க கூடும். சில நேரம் செயலற்று, பயனில்லாமல் போக கூடும். அது கை கூடாத தருணங்களில் கூட, நாம் ஊக்கத்தோடு, உயர்வாக எண்ணுவதை விட்டு விடாமல் இருக்க வேண்டும் என்பதே இக்குறளின் கருத்தாகும்.
- எண்ணங்கள் உயர்வாக உள்ள பொழுது அது நம் செயலில் பிரதிபலிக்கும். அது நம்மிடமும், நம்மை சுற்றி உள்ளோரிடமும் ஒரு நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும். அதுவே நம் வெற்றிக்கும் அடிக்கோளாக அமையும். சில சூழ்நிலைகளில் வெற்றி கை கூடாமல் போகும் பொழுது, நாம் தளர்வடையாமல் எதிர்மறை சிந்தனைகள் நம்மை அட்கொள்ளாமல், உயர்ந்த எண்ணங்கள் நீர்த்துப் போகாமல் காக்க வேண்டும்.
- ”நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்றார் சுவாமி விவேகானந்தர்.
- ஒரு செயலை நினைத்தால் தான் துவங்கி அதனை முடிக்க முடியும். (”நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்” என்ற பாடல் ஞாபகம் வரும்!) நினைப்பது உயர்வாக இருந்தால் முடிவும் உயர்வாக இருக்கும்.
- வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை நமக்கு முதலில் இருக்க வேண்டும். நமக்கே வெற்றி பெறுவோமா என்று சந்தேகமாக இருந்தால் வெற்றி கிடைப்பது கடினம் தான்.
- ஏதேனும் ஒரு இலட்சியத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதைத் தீவிரமாக எண்ணுங்கள். அந்த ஒரு எண்ணம் உங்கள் மனதில், உணர்வில், நாடி நரம்புகளில் முறுக்கேற வேண்டும். அப்போது அந்த இலட்சியம் நிறைவேறும்! இந்த உலகமே அந்த இலட்சியம் நிறைவேறத் துணை புரியும்! என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.
- அதனால் தான் நல்ல எண்ணங்களைத் தேர்வு செய்து அவற்றையே நினைக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் இருந்தால்தான் நாம் நல்ல மனிதனாக இருப்போம். உயர்ந்த குறிக்கோளை வைத்துக்கொண்டு, அயராது உழைத்தால் நாம் எண்ணியது எல்லாம் நடக்கும்.
தொடர்புடைய பதிவு: |
திருக்குறள் பற்றிய சிறப்பு கட்டுரை |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |