விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா.!

Advertisement

Viscom Course Details in Tamil

கல்வி என்பது எக்காலத்திற்கும் அழியாத செல்வமாக இருக்கிறது. காலத்திற்க்கு ஏற்ப ஒவ்வொரு பாடத்தின் மவுஸ் அதிகரிக்கும். அதை ஆனால் எல்லாரும் படிக்க மாட்டார்கள். ஒரு சிலர் தான் படிப்பார்கள். ஒருகாலத்தில் பொறியியல் மற்றும் ஆசிரியர் படிப்பு கெத்தாக இருந்தது. இந்த படிப்புகளை ஊருக்கு ஒருத்தர் தான் படித்திருப்பார்கள். ஆனால் இப்போது ஊரில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்த படிப்பை படித்திருக்கிறார்கள். ஏன் இப்போது இதெல்லாம் சொல்கிறீர்கள் என்ற சந்தேகம் வரலாம். 12-ம் வகுப்பு தேர்வு எழுதி ரிசல்ட் வந்த பிறகு வீட்டில் ஒரு போர்க்கலமே நடக்கும். இதை படி, அதை படி என்று உறவினர்கள், பெற்றோர்கள் என மாற்றி மாற்றி அறிவுரை கூறுவார்கள். உங்களுக்கு விஸ்காம் படிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்து அதை பற்றிய விவரம் தெரியவில்லை என்றால் இந்த பதிவை படிக்கும் போது ஒரு ஐடியா கிடைக்கும். சரி வாங்க பதிவுனுள் செல்வோம்.

Visual Communication Course Details in Tamil:

b.sc visual communication course in tamil

விசுவல் கம்யூனிகேஷன் என்றால் என்ன.?

விஷுவல் கம்யூனிகேஷன் என்பது படங்கள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி யோசனைகளையும் தகவலையும் அனுப்பும் ஒரு ஊடகமாகும்.  விஷுவல் கம்யூனிகேஷன் பாடத்தின் முக்கிய கூறுகள் விளம்பர அடிப்படைகள், மனித தொடர்பு, ஸ்கிரிப்ட் எழுதுதல், நகல் எழுதுதல், கிராஃபிக் வடிவமைப்பு, வடிவமைப்பு போன்றவை.

காட்சித் தொடர்பு என்பது கருத்துக்கள் மற்றும் தகவல்களை வெளிப்படுத்தும் காட்சி கூறுகளின் பயன்பாடாகும் அச்சுக்கலை, வரைதல், வரைகலை வடிவமைப்பு, விளக்கம், தொழில்துறை வடிவமைப்பு, விளம்பரம், அனிமேஷன் மற்றும் மின்னணு வளங்கள் ஆகியவை சார்ந்ததாகும்.

Bsc Agriculture படிப்பு பற்றிய தகவல்கள்.. 

விசுவல் கம்யூனிகேஷன் தகுதி:

இந்த துறையில் படிதிப்பதற்கு 12th படித்திருக்க வேண்டும். இவை மூன்று ஆண்டு படிக்க கூடிய இளங்கலை பட்ட படிப்பாகும். இதனை 6 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

விசுவல் கம்யூனிகேஷன் நுழைவு தேர்வு:

மோப் வைஷ்ணவ் விஷுவல் கம்யூனிகேஷன் நுழைவுத் தேர்வு
CEED (வடிவமைப்புக்கான பொதுவான நுழைவுத் தேர்வு)
இக்னோ ஓபன்மேட்
ஐஐஎம்சி டெல்லி நுழைவுத் தேர்வு
என்ஐடி நுழைவுத் தேர்வு
சத்யபாமா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு
NIFT) நுழைவுத் தேர்வு
ஐஐடிஎம் பொது நுழைவுத் தேர்வு

வேலைவாய்ப்பு துறைகள்:

திரைப்படம், டிசைனிங், ஜர்னலிசம், வீடியோ தயாரிப்பு, நிகழ்வு மேலாண்மை, ஃபேஷன், கிரியேட்டிவ் ரைட்டிங், அனிமேட்டர்
புகைப்படக்காரர், கார்ட்டூனிஸ்ட், டிஜிட்டல் போட்டோகிராபர், அறிவுறுத்தல் வடிவமைப்பாளர், நிகழ்வு மேலாளர், மீடியா மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், உற்பத்தி உதவியாளர் போன்றவைகளில் வேலைக்கு செல்லலாம்.

Bsc Information Technology படிப்பு பற்றிய தகவல்கள்

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி

 

Advertisement