10 ஆம் வகுப்பு படித்த பிறகு என்ன படிக்கலாம்..?

Advertisement

What to Study After 10th Class in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 10 ஆம் வகுப்பு படித்த பிறகு என்ன படிக்கலாம்..? (what to study after 10th class) என்பதை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க. பொதுவாக, 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு படிக்கும்போதே அடுத்து என்ன படிக்கலாம் என்ற குழப்பம் இருக்கும். அதிலும் குறிப்பாக 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதிக குழப்பம் இருக்கும். 11 ஆம் வகுப்பில் என்ன குரூப் எடுக்கலாம், இல்லை வேறு ஏதேனும் துறையில் சேர்ந்து படிக்கலாம், வேலைக்கு செல்லலாமா.? என பல குழப்பங்கள் இருக்கும்.

எனவே, 10 ஆம் வகுப்பு படித்து முடித்திற்கும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் 10 ஆம் வகுப்பு படித்த பிறகு என்ன படிக்கலாம்..? என்ன படித்தால் விரைவில் வேலைக்கு செல்லலாம்..? என்பதை விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

10 ஆம் வகுப்பு படித்த பிறகு என்ன படிக்கலாம்..?

10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அதன் பிறகு மூன்று வழிகளில் படிக்கலாம். அவை பின்வருமாறு:

1. மேல் நிலை பள்ளி (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (Certificate courses)

10th Revaluation அப்ளை செய்வது எப்படி.?

மேல்நிலை படிப்பு:

மேல்நிலை படிப்பு என்பது 10 ஆம் வகுப்பிற்கு அடுத்ததாக படிக்கும் 11 ஆம் வகுப்பு ஆகும். பெரும்பாலானவர்கள் இந்த படிப்பினை தான் தேர்வு செய்வார்கள். அப்படி பார்த்தால், 11 வகுப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், எந்த துறையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை உறுதியாக தீர்மானம் செய்து அதற்கேற்ற பிரிவை தேர்வு செய்யுங்கள். 11 வகுப்பில் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல், கணினிபொறிவியல், வரலாறு போன்ற பாட பிரிவுகள் இருக்கும். இவற்றில் நீங்கள் எதிர்காலத்தில் எது சம்மந்தமாக வேலைக்கு செல்ல விரும்புகிறீர்களோ அதற்கேற்ற பிரிவினை தேர்வு செய்யுங்கள்.

பட்டய படிப்பு (டிப்ளோமா):

டிப்ளோமா  வகைகள் உள்ளது. 11 ஆம் வகுப்பு படிக்க விரும்பாத மாணவர்கள் இதனை தான் அதிகம் தேர்வு செய்வார்கள். டிப்ளோமா படிப்பில், தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, plastic engineering etc உள்ளன. இதுவும் ஒரு நல்ல தேர்வாகும். எனவே, 11 ஆம் வகுப்பு படிக்க விருப்பமில்லாதவர்கள் டிப்ளோமா படிப்பினை தேர்வு செய்யலாம்.

சான்றிதழ் படிப்பு (Certificate courses):

சான்றிதழ் படிப்பு படிப்பு என்பது ஒரு வருட படிப்பு ஆகும். இதனை ஓர் ஆண்டிற்க்குள் சம்பாதித்துதான் ஆக வேண்டும் வேறு வழியே இல்லை என கருதுபவர்கள் மட்டும் தேர்வு செய்யலாம். Mechanic Refrigeration And Air- Conditioning, Footwear Maker, Plastic Mould Maker உள்ளிட்ட பல படிப்புகள் உள்ளது. ஆனால், இதனை பெரும்பாலும் தேர்வு செய்யாமல் இருப்பதே நல்லது. என்றால், இதனை பட்டய படிப்பு அல்லது மேல்நிலை படிப்பு முடித்த பிறகு Certificate courses செய்து கொள்ளலாம்.

B.Com Course பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement