10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்? | What to study after 10th class?
What to study after 10th class? – வணக்கம் நண்பர்களே.. தற்பொழுது 10-ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இருக்கும் ஒரு குழப்பம் என்னவென்றால் 11-ஆம் வகுப்பில் என்ன குரூப் எடுப்பது என்ற சிந்தனையுடன் இருப்பார்கள். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால் முதல் நிலைய குரூப்பை தேர்வு செய்து அவர்களுடைய பள்ளி படிப்பை தொடங்கலாம். அதுவே குறைவாக மதிப்பெண் எடுத்தால் கவலைப்பட வேண்டாம் எந்த குரூப்பை தேர்வு செய்து படித்தாலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டிய முயற்சிகளும், தன்னம்பிக்கையும் உங்கள் கைகளில் தான் உள்ளது. ஆக அதையும் எதிர்கொள்ளும் திறனை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். சரி இந்த பதிவில் 10-ஆம் வகுப்பு முடித்த பிறகு +1-யில் என்ன குரூப் எடுத்து படிக்கலாம் என்பது குறித்து அறியலாம் வாங்க.
11-ஆம் வகுப்பில் சயின்ஸ் குரூப்பில் நான்குவகையான குரூப் இருக்கிறது. அதேபோல் ஆர்ட்ஸ் குரூப்பில் 4 வகையான குரூப்ஸ் இருக்கிறது.
சயின்ஸ் குரூப்:
சயின்ஸ் குரூப் பொறுத்தவரை physics, chemistry, maths, biology, Group முதன்மையான குரூப் ஆகும். இந்த குரூப் எடுத்து படிக்கும் மாணவர்கள் 12-ஆம் வகுப்பு முடித்தபிறகு மருத்துவ துறையிலும் படிக்கலாம் அதேபோல் பொறியியல் துறையிலும் படிக்கலாம். அதேபோல் ஆசிரியராகவும் படிக்கலாம்.
அதேபோல் சயின்ஸ் குரூப்பில் இரண்டாவது நிலையாக இருக்கும் குரூப்ஸ் Physics chemistry, Zoology, botany ஆகிய பிரிவுகளை இரண்டாவது நிலை குரூப் ஆகும். இதனை பியூர் சயின்ஸ் என்று சொல்வார்கள். பியூர் சயின்ஸ் என்றால் கணிதம் இல்லாத குரூப்பை தான் பியூர் சயின்ஸ் என்று சொல்வார்கள். இருப்பினும் இவற்றில் கணிதம் இருக்காது என்பதால் நீங்கள் 12-ஆம் வகுப்பிற்கு பிறகு பொறியியல் சார்ந்த படிப்புகளை படிக்க முடியாது. காரணம் இந்த குரூப்பில் கணிதம் இல்லை என்பதனால். இருப்பினும் மருத்துவம் சார்த்த படிப்புகளை படிக்கலாம்.
மூன்றாவது நிலை குரூப்பில் Physics, chemistry, biology and computer science ஆகும். மூன்றாவது நிலை குரூப்ஸ் எடுத்து படிக்கும் போது கணினி சார்ந்த படிப்புகளை நீங்கள் படிக்க முடியும்.
11-ஆம் வகுப்பில் நீங்கள் எந்த குரூப்பை தேர்வு செய்து படிக்கிறீர்களோ அதனை பொறுத்து தான் நீங்கள் 12-ஆம் வகுப்பு முடித்திவிட்டு டிகிரி படிக்க முடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
12-வகுப்பு முடித்துவிட்டு B.sc Forestry பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா..? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!
ஆர்ட்ஸ் குரூப்:
ஆர்ட்ஸ் குரூப் பொறுத்தவரை Commerce, Accountancy, Economics போன்ற குரூப் இருக்கும். இதனை மெயின் சப்ஜட்டாக படிப்பார்கள். இதன் கூடவே ஹிஸ்டரி, கம்புயூட்டர் சயின்ஸ், பிசினஸ் மேக்ஸ், டைப்ரைட்டிங் போன்ற குரூப் இணைந்து வரும்.
இந்த குரூப்ஸ் எடுத்து படித்தால் கல்லூரியில் நீங்கள் Accountancy சம்பந்தமான படிப்பை படிக்க முடியும். அதேபோல் Accountancy தொடர்பான பணிகளையும் நீங்கள் செய்ய முடியும். அது மட்டும் இல்லாமல் நீங்கள் இரு ஆடிட்டராகவும் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்க முடியுடம். ஆர்ட்ஸ் குரூப் எடுத்து படிக்கும் போது நாம் மருத்துவம் சம்பந்தமான படிப்புகளை படிக்க முடியாது அதேபோல் பொறியியல் தொடர்பான படிப்பையும் படிக்க முடியாது.
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |