Which is Better ECE or EEE in Tamil | EEE Course Details in Tamil
மாணவர்கள் அனைவரும் பள்ளி படிப்பை முடித்ததும் மேற்படிப்பு என்ன படிக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருப்பீர்கள். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் கல்வி பற்றிய விவரங்களை பதிவிட்டு வருகிறோம். அதேபோல் இன்றைய பதிவில் EEE Vs ECE இதில் எதை தேர்வு செய்தல் சிறந்தது.? இவற்றை தேர்வு செய்து படித்தால் எந்த துறையில் வேலைக்கு செல்லலாம்..? போன்ற விவரங்களை தொகுத்துள்ளோம். எனவே நீங்கள் இன்ஜினியரிங் படிப்பை படிக்க விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, நீங்கள் EEE அல்லது ECE பாடம் படிக்க விரும்பினால் இப்பதிவை படித்து அவற்றின் விவரங்களை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
பொறியியல் கல்லூரியில் எந்த படிப்புகளை படித்தால் வேலை வாய்ப்பு..?
ECE or EEE Which is Best in Future:
ECE மற்றும் EEE விரிவாக்கம்:
- ECE- Electronics and Communication Engineering
- EEE – Electrical and Electronic Engineering.
ECE என்றால் என்ன.?
ECE என்பது எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல், மைக்ரோ பிராசசர், டிரான்ஸ்மிஸன், டிஜிட்டல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பாடங்களை பற்றிய படிப்பு ஆகும். அதாவது, மின்னணு சாதனங்களின் உற்பத்தி, வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் சோதனை, தொலைத்தொடர்பு அமைப்புகள், மின்னணுவியல் போன்றவற்றை பற்றி படிக்கும் பபடிப்பு ஆகும். ECE படிப்பு மற்ற இன்ஜினியரிங் படிப்பை போல சிறிது கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இப்படிப்பு மிகவும் எளிதாக இருக்கும்.
ECE படிப்பில் உள்ள லாஜிக் புரோகிராமிங், C, C++ போன்ற கோடிங் உள்ள பாடங்களை புரிந்து கொள்ள நேரம் எடுக்கும்.
ECE படித்தவர்களுக்கு எத்துறையில் வேலை கிடைக்கும்.?
ECE படித்தவர்களுக்கு எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சம்மந்தப்பட்ட துறையிலும் IT துறையிலும் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளது.
EEE என்றால் என்ன.?
EEE என்பது முழுக்க முழுக்க எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல்,பவர் சிஸ்டம்ஸ், சிக்னல் ப்ராசசிங், புரோகிராமிங், சர்க்யூட் அண்ட் சிஸ்டம்ஸ், கண்ட்ரோல் இன்ஜினியரிங், மைக்ரோ பிராசசர்ஸ் உள்ளிட்ட பாடங்களை பற்றி படிக்கும் படிப்பு ஆகும்.
அதிக சம்பளம் தரும் டாப் 15 படிப்புகள்.. மாணவர்களே சிந்திக்க வேண்டிய நேரம் இது தான்..!
EEE படித்தவர்களுக்கு எத்துறையில் வேலை கிடைக்கும்.?
EEE படித்தவர்களுக்கு எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சம்மந்தப்பட்ட துறையில் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளது.
EEE Vs ECE எது சிறந்தது.?
மேற்கூறியுள்ள விவரங்களின்படி, நீங்கள் எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த துறையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினால் EEE படிப்பு உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
அதுமட்டுமில்லாமல், எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த துறையிலும் IT துறையிலும் வேலைக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு ECE படிப்பு சிறந்ததாக இருக்கும்.
இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |