வருமான வரி விதிகள்
மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஆசை கனவு இல்லாமல் இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். அதில் ஒன்று தான் சொத்து வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சில நபர்கள் இருக்கின்ற சொத்தை விற்று விட்டு புதிய சொத்தை வாங்குவார்கள். இதில் நீங்கள் சொத்தை வாங்கினாலும் சரி, விற்றாலும் சரி வருமான வரி விதிகளை பின்பற்ற வேண்டும். அது என்னென்ன விதிகள் என்று இந்த பதவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
வருமான வரி விதிகள்:
2015 ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் கீழ் 269எஸ்எஸ், 269டி, 271டி மற்றும் 271இ ஆகிய பிரிவுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் முக்கியமாக 269ss பிரிவில் முக்கிய மற்றம் கொண்டுவரப்பட்டது. கருப்பு பணத்தை தடுக்கும் வகையில் அரசு மாற்றத்தை ஏற்படுத்தியது. ரொக்க பண பரிவர்த்தனை செய்யும் போது பணமானது சட்ட பூர்வமாக சம்பாதித்ததா அல்லது சட்ட விரோதமாக சம்பாதித்தது என்பதை கண்டறிய மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவற்றை பற்றி கீழே காண்போம்.
வீடு, நிலம் மற்றும் சொத்து போன்றவை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை.!
ஒருவர் வீடு மற்றும் நிலம் அசையா சொத்துக்களை விற்றால் அதற்காக 20,000 ரூபாய் மேல் ரொக்கமாக எடுத்து கொண்டால் அவருக்கு 100% அபராதம் விதிக்கப்படும். வருமான வரி சட்டம் படி 269ss பிரிவின் கீழ் ஒரு நபர் சொத்தை விற்கும் போது 20,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்து கொண்டால் நீங்கள் செலுத்திய முழுத்தொகையும் இழப்பீடாக செலுத்த வேண்டும்.
20,000 ரூபாய்க்கு நெல் செலுத்த வேண்டும் என்றால் காசோலை அல்லது இன்டர்நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும்.
இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை என்றால் என்ன
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |