403 Ipc Section
தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு இந்திய தண்டனை சட்டத்தை பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மனிதனாக பிறந்த அனைவரும் இந்திய சட்டங்கள் பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கட்டாயம் ஒரு தண்டனை இருக்கும். அதுபோல மற்றவர்களுடைய சொத்துக்களை நேர்மையற்ற முறையில் பயன்படுத்தினால் அதற்கும் தண்டனை இருக்கும். அந்த சட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் இந்த சட்டத்தை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்..! |
403 Ipc Section in Tamil:
மற்றவரின் சொத்துக்களை அவருடைய அனுமதி இல்லாமல் ஒருவர் நேர்மையற்ற முறையில் பயன்படுத்தினால் அவருக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 403 கீழ் தக்க தண்டனை வழங்கப்படும்.அதாவது, உதாரணத்திற்கு ஒருவர் ஒரு பொருளைக் கண்டெடுக்கிறார். அந்த பொருள் யாருடையது என்று அவருக்குத் தெரியாது. ஆனால் அவர் அந்த பொருளை சொந்தக்காரர் யார் வந்து கேட்டாலும் திருப்பிக் கொடுத்து விடலாம் என்ற நல்ல எண்ணத்துடன் எடுத்து வைத்து கொள்கிறார். அந்த பொருளை பாதுகாத்தும் வருகிறார்.
அதற்காக அவரை தன்னுடைய பொருளை எடுத்து கொண்டார் என்று அவர் மேல் குற்றம் சொல்ல முடியாது. ஆனால் அதுவே அந்த பொருளுக்கு சொந்தக்காரர் யாரென்று தெரிந்த பிறகும், அந்த சொத்தைத் தனக்கென்று வைத்துக்கொண்டால் அது குற்றமாகும். அதனால் அவருக்கு இந்த 403 சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.
அதுமட்டுமில்லாமல், அந்த பொருளின் சொந்தக்காரர் யாரென்று தெரிந்து கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பின் அவருக்கு மேற்படி பொருள் தன்னிடத்தில் இருக்கிறது என்று தெரிவிக்க வேண்டும். அப்படிச் தெரிவிக்காமல் இருந்தால் அது ஒரு குற்றமாகும்.
அதாவது எவர் ஒருவர் எந்தவொரு அசையும் சொத்துக்களை நேர்மையற்ற முறையில் தவறாகப் பயன்படுத்துகிறாரோ அல்லது தனது சொந்த உபயோகத்திற்கு மாற்றுகிறாரோ அவருக்கு இந்த சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.
இந்த தவறை செய்தவருக்கு 2 ஆண்டுகள் வரை விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் அல்லது அபராதமும் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 வீட்டு பத்திரத்தை வைத்து கடன் வாங்குவதற்கு முன் நீங்கள் இதை தெரிந்துகொள்ளுங்கள்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |