Buds Act என்றால் என்ன.?

Advertisement

 Buds Act Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Buds Act பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.  சமீபத்தில் Buds Act பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால்,  நம்மில் பலருக்கும் இந்த சட்டம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், நாம் அனைவருமே அதனை தெரிந்துகொள்ள விரும்புவோம். எனவே, நீங்கள் Buds Act பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஆமாங்க, இப்பதிவில் Buds Act பற்றிய விவரங்களை தொகுத்து, பின்வருமாறு கொடுத்துள்ளோம். Buds Act என்பது சட்டத்துக்கு புறம்பாக செயல்படுத்தப்படும் முதலீட்டு திட்டங்களை அறிந்து தடுக்கும் சட்டமாகும். எனவே, இச்சட்டம் பற்றிய விவரங்களை பின்வருமாறு விவரமாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை என்றால் என்ன.?

Buds Act Tamil Meaning:

  •  Buds Act என்பது ஒழுங்குபடுத்தப்படாத வைப்புத் திட்டங்களை தடை செய்யும் சட்டமாகும் (Banning of Unregulated Deposit Scheme). முதலீட்டு திட்டங்களை காட்டி, மக்களை ஏமாற்றும் செயல்களை தடுக்கும் விதமாக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. 
  • MLM நிறுவனங்களின் பெயரில் ஏமாற்றுவதை நாம் அறிந்து இருப்போம். இதுபோன்ற ஏமாற்று வேலைகளை தடுப்பதற்காக 2019 ஆம் ஆண்டில்  மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.
  • மோசடியான MLM மற்றும் MLM அல்லாத செயல்பாடுகள் சமாளிக்க வலுவான சட்டம் இயற்றும் கட்டமைப்பை வழங்க Buds Act உதவுகிறது.
  • இந்த சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படும் நபர்களுக்கு 10 வருடம் சிறை தண்டனை வழங்கப்படும்.
  • ML, சிட் ஃபண்ட் போன்ற முதலீட்டு திட்டங்கள் பற்றி கேட்பதற்கு நன்றாக தான் இருக்கும். ஆனால், அதில் சட்ட விரோத செயல்கள் பல நடைபெறும். இத்திட்டத்தில் ஒரு சில நபர்கள் சேர்ந்தவுடன், அவர்களை காட்டி புதிய முதலீட்டார்களை ஈர்த்து கொள்வார்கள். அடுத்து,புதிய முதலீட்டார்களின் பணத்தில் இருந்து பாதியை எடுத்து பழைய முதலீட்டார்களுக்கு லாபம் என்ற பெயரில் கொடுத்து விடுவார்கள். இதேபோன்று சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
  • ஒரு கட்டத்தில் புதிய முதலீட்டார்களின் சேர்க்கை என்பது இருக்காது. அப்போது, பழைய முதலீட்டார்களுக்கு பணம் கொடுக்கப்படுவது நிறுத்தப்படும். அப்போது தான் இது ஒரு ஏமாற்று வேலை என்று தெரிய வரும்.
  • எனவே, இந்த அளவிற்கு (ஏமாத்து வேலை) வருவதற்கு முன்பாக வைப்பு நிதி நடவடிக்கைகளை சட்டத்துக்கு உட்பட்டது அல்லது சட்டத்துக்கு புறம்பானது என  வரையறுக்க இந்த Buds Act உதவுகிறது. மேலும், இச்சட்டத்தின் மூலம் ஏமாற்று வேலையில் சிக்கியவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன.?

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement