வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தேவதாசி ஒழிப்புச் சட்டம் | Devadasi Abolition Act in Tamil

Updated On: March 28, 2025 6:39 PM
Follow Us:
Who Stopped Devadasi System in Tamil
---Advertisement---
Advertisement

Who Stopped Devadasi System in Tamil

பொதுவாக நாம் ஏதாவது தவறு செய்தால் அம்மா அப்பாவிற்கு தான் அதிகமாக பயம் கொள்வோம். அதேபோல் நாம் செய்யும் தவறுகள் சிறியது என்றால் அதனை பற்றி யோசித்து அம்மா அப்பா எது சரி என்று சொல்வார்கள். ஆனால் நாம் இவர்களை விட நாம் செய்யும் தவறுகளுக்கு சட்டம் என்று ஒரு உள்ளது. அதற்கு தான் அதிகமாக பயம் கொள்ளவேண்டும். நாம் செய்யும் தவறுகள் அனைத்திற்கும் சரியா தீர்ப்பு சட்டங்கள் தான் அளிக்கும். ஆகவே அந்த காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் சில காரியங்களை செய்யும் போது அதனை தடுத்து இது சட்டத்திற்கு புறம்பான விஷயம் இனி இதுபோல் யாரும் செய்ய கூடாது என்று சொல்லி அதனை ஒழிப்பார்கள். அப்படி ஒழித்த ஒரு சட்டங்களை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக பார்க்க போகிறோம்.

தேவதாசி ஒழிப்புச் சட்டம்:

தேவதாசி என்பவர் தெய்வத்திற்காக சிறு வயதில் நேந்துவிடப்பட்ட பெண்கள் ஆவார்கள். இவர்கள் கோவிலின் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் இருப்பார்கள். இவர்கள் அனைவருமே கடவுளை திருமணம் செய்தவர்களாகவும், நித்திய சுமங்கலியாகவும் கருதப்படுவார்கள்.

இவர்கள் கலை, நடனம் என சிறந்த கலைகளின் மீது ஆர்வமும் அதில் தேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் கோயிலை தூய்மை செய்தல், நீர் இறைத்தல், பூ கட்டுதல், மடப்பள்ளிக்கு உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

ஆனால் இதுபோல் செய்வது முற்றிலும் தவறு என்று சொல்லி சென்னை தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் என்பது தேவதாசி முறையை ஒழிப்பதற்காக இந்தியா விடுதலையை அடைந்ததை அடுத்து 9 அக்டோபர் 1947 அன்று நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். இது தமிழ்நாடு தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் என்றும் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் பின்பு தான் தேவதாசிகளை திருமணம் செய்யும் உரிமை கொடுத்தது. இந்த சட்டத்தை நிறைவேற்ற முத்துலட்சமி ரெட்டி, பெரியார் என அனைவருமே இந்த சட்டத்திற்காக போராடினார்.

தேவதாசி ஒழிப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

 தேவதாசி அர்ப்பணிப்பு தடை:

  • 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை தேவதாசியாக அர்ப்பணித்தல் குற்றமாகும்.

 தண்டனை:

  • தேவதாசி முறையில் ஈடுபடும் பங்காளிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினருக்கு
  • 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

 தேவதாசிகளுக்கான புனர்வாழ்வு:

  • தேவதாசிகளுக்கான புனர்வாழ்வு திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
  • கல்வி, தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது

பாலியல் வன்முறைக்கு எதிரான பாதுகாப்பு:

  • தேவதாசிகள் மீது பாலியல் வன்முறை மேற்கொண்டால்,
  • குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர்.

.தேவதாசி ஒழிப்பு – தற்போதைய நிலை:

  • தேவதாசி முறை சட்டபூர்வமாக தடைசெய்யப்பட்டாலும்,
  • கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சில பகுதிகளில் இன்னும் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.
  • தேவதாசிகள் புதுப்பெயரில் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதாக புகார்கள் எழுகின்றன.
  • அரசாங்கம் இதை தடுக்க சமூக மேம்பாட்டு திட்டங்கள் உருவாக்கியுள்ளது.

 தேவதாசி ஒழிப்புக்கான முயற்சிகள்:

  • சமூக ஆர்வலர்கள், பெண்கள் உரிமை அமைப்புகள், தேவதாசி முறையை ஒழிக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.
  • தேவதாசிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சட்ட பாதுகாப்பு வழங்குவதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை என்றால் என்ன

இந்திய அரசு படை வீரரின் சீருடையை தவறான நோக்கத்தில் அணிந்தால் இந்த தண்டனை தான் கிடைக்கும்

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Law 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now