வருமான வரி சட்டம் பிரிவு 148 | Income Tax Act 148 In Tamil
இன்றைய பதிவில் வருமான வரி சட்டம் பிரிவு 148 பற்றி பார்க்க போகிறோம். வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 148 இன் கீழ் வருமானம் தப்பிக்கும் மதிப்பீட்டிற்காக வரி செலுத்துபவருக்காக நோட்டிஸ் அளிப்பதற்கு மதிப்பீட்டு அதிகாரிக்கு அதிகாரம் அளிக்கிறது. இது வரி செலுத்துபவர்கள் உண்மையான வருமானத்தை குறிப்பிடவில்லை அல்லது தவறான பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளதாக மதிப்பீட்டு அதிகாரி சந்தேகித்தால், அதிகாரிகள் இந்த பிரிவின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். மதிப்பீட்டாளர் முன்னர் தாக்கல் அறிவிப்பு செய்தாரா இல்லையா என்பதை கருத்தில் கொள்ளாமல் இந்த பிரிவின் கீழ் அறிவிப்பு வெளியிடலாம். இந்த அறிவிப்பின் படி வரி செலுத்த தவறினால் அபராத தொகை அல்லது சிறை தண்டனை அளிக்கப்படும். வருமான வரி சட்டம் பிரிவு 148 பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..
பிரிவு 148 இன் அறிவிப்பு எப்படி வெளியிடப்படுகிறது?

மேலும் ,பிரிவு 148 இன் கீழ் மதிப்பீட்டு அதிகாரி உடனடியாக அறிவிப்பை வெளியிட முடியாது. பிரிவு 148 இன் கீழ் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் மதிப்பீட்டு அதிகாரி பிரிவு 148 A இன் கீழ் விசாரணை நடத்த வேண்டும்.
குறிப்பிட்ட மேல் அதிகாரியின் அனுமதியுடன் மட்டுமே விசாரணை நடத்த முடியும் . வரி செலுத்துவோருக்கு, பிரிவு 148 A இன் கீழ் காரணமான அறிவிப்போடு சேர்த்து அனைத்து தகவல்களையும் மதிப்பீட்டு அதிகாரி வழங்க வேண்டும்.
மதிப்பீட்டு அதிகாரிகள் வரி செலுத்துபவருக்கு அவர்களது விளக்கத்தை அளிப்பதற்கு குறைந்தது ஏழு நாட்கள் மட்டுமே கால அவகாசம் அளிக்க வேண்டும். 30 நாட்கள் மேல் அவகாசம் அளிக்க கூடாது.
வரி செலுத்துபவரின் காரணத்தை பரிசீலித்த பிறகு மறு மதிப்பீட்டிற்கான அறிவிப்பை வெளியிடலாமா என்பதை வருமான வரி அதிகாரி முடிவு எடுப்பார்.
வருமான வரி அதிகாரி அறிவிப்பை தொடங்க விரும்பினால், அவர்கள் உத்தரவின் நகல்களையும் பிரிவு 148 இன் கீழ் அறிவிப்பின் கீழ் வரிசெலுத்துபவருக்கு வழங்க வேண்டும்.
பிரிவு 148 இன் அறிவிப்பு வெளியிடுவதற்கான கால வரம்பு :
சாதாரண கால வரம்பு தொடர்புடைய மதிப்பீடு ஆண்டில் இருந்து 3 ஆண்டுகள் அல்லது 3 மாதங்கள்.
மதிப்பீட்டு அதிகாரியிடம் குறிப்பிட்ட கால வரம்பில் படி ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் விதிக்கப்படாததற்கு முறையான ஆவணங்கள் இருந்தால் தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டில் இறுதியில் இருந்து 3 மாதங்கள் அல்லது 5 ஆண்டுகள் வரை இருக்கும்.
இந்திய தண்டனை சட்டம் 207 | IPC 207 in Tamil
பிரிவு 148 இன் கீழ் அளிக்கப்படும் தண்டனை :
வரி செலுத்துபவர் பிரிவு 148 இன் கீழ் வழங்கப்பட்ட அறிவிப்பிற்கு பதிலளிக்க தவறினால் அல்லது மறைக்கப்பட்ட போலியான வருமானத்தை கொண்டிருப்பது கண்டுபிடித்தால் அவர்கள் பின்வரும் அபத்தங்களை செலுத்த நேரிடும்.
வரிக்கு அதிகாரியின் அறிவிப்புக்கு பதில் அளிக்க தவறினால் பிரிவு 272A இன் கீழ் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
வரி செலுத்தும் வருமான வரியில் இருந்து குறைவான வருமான தொகை அல்லது தவறான அறிக்கையை தாக்கல் செய்தால் பிரிவு 270 A இன் கீழ் வரி தொகையில் இருந்து 50% வரை அபராதம் விதிக்கபடும்.
வருமான வரி செய்பவர்கள் வேண்டுமென்றே வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறினால் அல்லது ரூ.25 லட்சத்துக்கு மேல் வருமான வரி ஏய்ப்பு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்.
| மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |














