தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 | IT Act 2000 in Tamil
1996 ஆம் ஆண்டு ஐ .நா ஒவ்வொரு நாடும் இ-காமர்ஸ் மற்றும் சைபர் கிரைம் தொடர்பான சட்டங்களை வைத்திருப்பதை கட்டாயமாக்கியது. இந்த சட்டம் குடிமக்கள் மற்றும் அரசாங்கத்தின் தரவுகளைப் பாதுகாப்பதற்காக, 2000 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, நிறைவேற்றப்பட்டது. இணைய குற்றங்களுக்கான சட்டத்தை உருவாக்கிய நாடுகளின் பட்டியலில் உலகின் 12 வது நாடாக இந்தியா உள்ளது.
இந்த IT Act 2000, இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் கையொப்பங்கள் தொடர்பான தகவல்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. IT Act, சமூகத்தின் தேவைக்கு ஏற்ப 2008 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 | IT Act 2000 in Tamil
தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகள்:
- IT Act 2000 Section 66B
- IT Act 2000 Section 66C
- IT Act 2000 Section 66E
- IT Act 2000 Section 66F
- IT Act 2000 Section 68
- IT Act 2000 Section 69A
- IT Act 2000 Section 71
IT Act 2000 Section 66B in Tamil
மோசடி போன்ற தீங்கு விளைவிக்கும் நோக்கத்தோடு கணினியை ஹேக் செய்தல் அல்லது கணினியை நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் போன்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைத்தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்படும்.
IT Act 2000 Section 66C in Tamil
ஒரு நபரின் அடையாளம் அதாவது ஆதார் கார்டு, பான் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விவரங்கள் போன்ற தனிப்பட்ட தரவுகளை அந்த தெரியாமல்,வேறு ஒருவர் குற்றம் அல்லது மோசடி செய்ய பயன்படுத்தினால். அந்த நபருக்கு, IT Act Sec 66C, படி 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைத்தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்படும்.
IT Act 2000 Section 66E in Tamil
ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை குறிப்பிட்ட நபரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது போன்ற தனியுரிமை மீறல் தொடர்பான குற்றங்களுக்கு, 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 2 லட்சம் அல்லது சிறைத்தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்படும்.
IT Act 2000 Section 66F in Tamil
ஒருவர் டிஜிட்டல் ஊடகம் மூலம் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் ஏதேனும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் IT Act Sec 66E யின் படி ஆயுள் தண்டனை விதிக்க படும்.
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உங்களுக்கு கிடைக்கிறதா? இல்லை என்றால் இந்த பதிவை முழுமையாக பாருங்கள் …..
IT Act 2000 Section 68 in Tamil
தொழில்நுட்பரீதியான அரசாங்க உத்தரவுகளை அனைத்து நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும். அந்த உத்தரவுகளை மீறும் நபருக்கு உத்தரவுகளுக்கு இணங்கத் தவறுதல் மற்றும் மறுத்தல் என்ற அடிப்படிடையில் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ₹1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
IT Act 2000 Section 69A in Tamil
IT Act Sec 69A, தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்காக இணைய தளங்களை முடக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பிரச்சனை வரும் போது தளங்களை மூடக்கவும் அல்லது உத்தரவுகள் பிறப்பிக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது. உத்தரவுகளை கடைபிடிக்காத நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அல்லது ரூபாய் 2 லட்சம் அபராதம் அல்லது சிறை தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்படும்.
கலகத்தில் ஈடுபட்டால் இந்த தண்டனை தான் கிடைக்கும்..!
IT Act 2000 Section 71 in Tamil
உரிமம் அல்லது டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழைப் பெறுவதற்காக ஒரு நபர் தவறான தகவல்களை சமர்ப்பிப்பது அல்லது தகவல்களை மறைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூபாய் 100,000 அபராதம் விதிக்கப்படும்.
2018 ஆம் ஆண்டில் அரசாங்கம் IT Act 2000 ல் சில திருத்தங்களை கொண்டுவந்தது.
அந்த திருத்தம் இடைத்தரகர்களுக்கான பொறுப்புக் கூறுவதற்கும் அவர்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் சில வழிகாட்டுதல்களை கூறுகிறது.
தகவல் தொழில்நுட்பம் 2021 (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு ) ஆனது இந்தியாவின் இடைநிலை வழிகாட்டுதல்கள் விதிகள் 2011, தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் டிஜிட்டல் மீடியாவிற்கான ஒழுங்குமுறை மற்றும் நெறிமுறைகள் 2018 ஆகிய சட்டங்களின் கலவையாகும். இச்சட்டம் 25 மே 2021 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
தகவல் தொழில்நுட்பம் சட்டம் 2021 பற்றி அடுத்த அடுத்த பதிவுகளில் முழுமையாக பார்ப்போம் .
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |