வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

324 IPC – ஆயுதம் வைத்து தாக்கிய குற்றத்திற்கு இந்த தண்டனை தான்..!

Updated On: March 5, 2025 8:00 PM
Follow Us:
ipc 324 and 325 in tamil
---Advertisement---
Advertisement

324 ipc Section என்றால் என்ன மற்றும் அதற்கான தண்டனை தமிழில்

சட்டத்தை பற்றி படிக்க வேண்டும் என்று நிறைய நபர்களுக்கு ஆசையாக இருக்கும். சில நபர்களால் படிக்க முடியும், சில நபர்களால் படிக்க முடியாது. அந்த வகையில் மனிதனாக பிறந்த அனைவருமே ஒவ்வொரு குற்றத்திற்கான தண்டனையும், எதற்கெல்லாம் சட்டம் இருக்கின்றது என்றும் தெரிந்து கொள்வது அவசியமானது. உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் சட்டம் பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். இந்த பதிவில் Ipc Sec 324 , 326 சட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

324 ipc in Tamil:

324 ipc in Tamil

இந்தக் குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். ஒருவர் இன்னொருவருக்கு மரணத்தை ஏற்படுத்த கூடிய அளவில் கத்தி, அரிவாள், துப்பாக்கி, நெருப்பு, விஷம், வெடி மருந்து, துரு பிடித்த பொருட்கள் போன்ற பொருட்களில் ஏதவாது ஒரு பொருளை பயன்படுத்தி மனிதர்களின் சுவாசம் அல்லது உறுப்புகளில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அது குற்றமாகும். இந்த குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்படும்.

துப்பாக்கி, குத்துவாள், கத்தி, அரிவாள் போன்றவை மரணத்தை விளைவிக்கப் பயன்படுத்தக்கூடியவை. அதே போல் நெருப்பும், நெருப்பில் காய்ச்சப்பட்ட கருவிகளும் அத்தகைய அபாயத்தை விளைவிக்கக்கூடியவை. இதுபோன்ற செயல்களுக்கு 324 ipc தண்டனை வழங்கப்படும்.

326 ipc in Tamil:

326 ipc in Tamil

மரணத்தை உண்டாக்குவதற்காக கத்தி, அரிவாள், துப்பாக்கி, நெருப்பு, விஷம், வெடி மருந்து, துரு பிடித்த பொருட்கள் போன்ற பொருட்களால் தாக்கி அந்த நபர் அதனால் பெருங்காயம் ஏற்பட்டால் அந்த குற்றத்தை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதனுடன் அபராதமும் விதிக்கப்படும்.

மரணத்தை உண்டாகக்கூடிய விதத்தில் நெருப்பு, நெருப்பில் காய்ச்சப்பட்ட பொருட்கள் அல்லது மரண அபாயத்தை உண்டாகக்கூடிய விஷயம் போன்றவற்றிற்கு  10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

இதையும் படியுங்கள் ⇒ போலீஸ் அதிகாரியின் கடமைகளுக்கான சட்டங்கள் என்னென்ன தெரியுமா..?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now