வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பெண்ணிற்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்தால் இந்த தண்டனை தான் .!

Updated On: February 16, 2023 9:18 AM
Follow Us:
Ipc sec 366 in tamil
---Advertisement---
Advertisement

Ipc sec 366

சட்டம் பற்றிய தகவலை தொலைக்காட்சி அல்லது நேரிலோ பார்த்திருப்போம். குற்றம் செய்தால் தண்டனை என்று தெரியும். ஆனால் என்னன்னே குற்றத்திற்கு என்னென்ன தண்டனை என்று தெரிந்திருக்காது. ஆனால் மனிதனாக பிறந்த அனைவருமே எந்தெந்த குற்றத்திற்கு என்னென்ன தண்டனை என்று தெரிந்து கொள்வது அவசியமானது. உங்களுக்கும் உதவும் வகையில் நம் பதிவில்  தினந்தோறும் தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் 365, 366, 367 சட்டத்திற்கான குற்றம் மற்றும் தண்டனையை தெரிந்து கொள்வோம் வாங்க.

இந்திய தண்டனை சட்டபிரிவு 365:

ஒரு நபரை யாருக்கும் தெரியாமல் கடத்தினாலோ அல்லது அடைத்து வைக்கும் நோக்கத்துடன் கடத்தினாலோ குற்றமாகும். இந்த குற்றத்திற்கு இந்திய தண்டனை சட்டம் 365-ன் படி 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதமும் சேர்த்து தண்டனையாக கொடுக்கப்படும்.

திருடினால் இந்த தண்டனைகள் தான் கிடைக்கும்..!

இந்திய தண்டனை சட்டபிரிவு 366:

ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் திருமணம் செய்வதற்கு கட்டாயப்படத்துனாலோ அல்லது அவள் விருப்பம் இல்லாமல் கடத்தி சென்று திருமணம் செய்தாலோ அது குற்றமாகும். இந்த குற்றத்திற்கு இந்திய தண்டனை சட்டப்பிரிவு  366-ன் படி 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட கூடிய சிறை தண்டனை மற்றும்  அபராதமும் சேர்த்து விதிக்கப்படும்.

இந்திய தண்டனை சட்டபிரிவு 367:

ஒரு நபரை கடத்தி சென்று அவர்களை அடிமையாக வைத்திருந்தாலோ அல்லது அவர்களுக்கு காயம் ஏற்படும் வகையில் ஏதும் செய்திருந்தாலோ குற்றமாகும். இந்த குற்றத்திற்கு இந்திய தண்டனை சட்டப்பிரிவு  367-ன் படி 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட கூடிய சிறை தண்டனை மற்றும்  அபராதமும் சேர்த்து விதிக்கப்படும்.

வீடு தொடர்பான குற்றம் செய்பவர்களுக்கு இது தான் தண்டனை..!

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now