தண்டனை சட்டம் 116 பற்றிய விளக்கம்
வணக்கம் நண்பர்களே..! நீங்கள் பொதுநலம். காம் பதிவில் நிறைய வகையான சட்டங்கள் பற்றி தெரிந்து கொண்டு இருப்பீர்கள். அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 116 பற்றிய தகவல்கள் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். இந்த சட்டத்தில் சொல்லபட்டுள்ள குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனை என்ன என்பது பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொள்ள பதிவை தொடர்ந்து படித்து பாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323-யின் விளக்கம்
IPC Section 116 in Tamil:
ஒருவர் மற்றொவரை எந்த விதமான குற்றங்களை செய்ய தூண்டினாலும் அது தண்டனை சட்டம் 116-ன் படி குற்றமாகும். இதில் குற்றத்தை செய்ய தூண்டியவருக்கு தண்டனை அளிக்க படும்.
அதுபோல அரசு சார்ந்த பொதுப்பணியாளர் ஒருவரை மற்றொருவர் குற்றம் செய்ய தூண்டினாலும் இச்சட்டத்தின் படி அது குற்றமாகும். அதற்கான தண்டனை IPC Section 116-ன் படி விதிக்கப்படும்.
அரசு பொதுப்பணியாளர் தன்னுடைய வேலையை செய்வதற்கு மற்றொருவர் அதற்கு கைமாறாக பணமோ அல்லது நகையோ கொடுக்கும் போது பொதுப்பணியாளர் வாங்க மறுத்து விட்டால். குற்றம் செய்ய தூண்டிய காரணத்திற்காக லஞ்சம் கொடுத்தவருக்கு சட்டம் 116-ன் படி தக்க தண்டனை வழங்கப்படும்.
அதுமட்டும் இல்லாமல் ஒருவர் மற்றொவரை ஒரு குற்றம் செய்ய தூண்டிய காரணத்தினால் வேறு வழி இல்லாமல் அவர் அந்த குற்றத்தை செய்தால் இந்த இடத்தில் இரண்டு நபர்களும் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.
மேலே சொல்லப்பட்டுள்ள குற்றத்தை செய்தால் மெய்க்காவல் தண்டனை அல்லது கடுங்காவல் தண்டனை இந்திய தண்டனை சட்டம் 116-ன் படி குற்றவாளிக்கு அளிக்கப்படும்.
சில நேரத்தில் அபராததுடன் கூடிய தண்டனை குற்றத்தை செய்ய தூண்டிய காரணத்திற்காக வழங்கப்படும்.
இதையும் படியுங்கள்⇒ இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 304 பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.Com |