IPC Section 121 to 123 in Tamil
பொதுவாக நம்மை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்திய தண்டனை சட்டம். ஆனால் அப்படி நம்மை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தண்டனை சட்டம் பற்றிய சரியான புரிதல் உள்ளதா என்றால் இல்லை என்பதே உண்மை. அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சட்ட பிரிவு பற்றிய சரியான விளக்கத்தை அறிந்து கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 121, 122 மற்றும் 123 பற்றிய சரியான விளக்கத்தை பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 லஞ்சம் வாங்குபவர்களுக்கும் சட்டத்தில் தண்டனை உண்டு உங்களுக்கு தெரியுமா.?
IPC Section 121 in Tamil:
எவரேனும் ஒருவர் அல்லது ஒரு கூட்டம் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தால் அல்லது போர் தொடுப்பதற்கு முயற்சிப்பது குற்றம் ஆகும். அத்தகைய குற்றத்தை புரிந்தவர்களுக்கு அல்லது குற்றம் புரிய முயற்சிப்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
IPC Section 122 in Tamil:
எவரேனும் ஒருவர் அல்லது ஒரு கூட்டம் இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் உள்நோக்கத்துடன் ஆட்கள், ஆயுதங்கள் அல்லது படைக்கலன்களைச் சேகரித்தல் குற்றம் ஆகும். அத்தகைய குற்றத்தை புரிபவர்களுக்கு ஆயுள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஒருவரை மிரட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்..!
IPC Section 123 in Tamil:
எவரேனும் ஒருவர் இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுப்பதற்கான ஒரு திட்டம் தீட்டி இருப்பதை அறிந்தும் மறைப்பது குற்றம் ஆகும். அத்தகைய குற்றத்தை செய்பவர்களுக்கு பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |