வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்திய தண்டனை சட்டம் 136 மற்றும் 137 ஆகியவற்றுக்கான சரியான விளக்கத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்..!

Updated On: April 29, 2023 9:03 AM
Follow Us:
IPC Section 136 and 137 in Tamil
---Advertisement---
Advertisement

IPC Section 136 and 137 in Tamil

நமது இந்தியாவில் மக்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை காப்பாற்றுவதற்காக தான் இந்திய தண்டனை சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய மக்களான நமக்கு நமது இந்திய சட்டம் பற்றியும் அதில் உள்ள சட்ட பிரிவுகள் பற்றியும் சரியான புரிதல் இல்லை என்பது கசப்பான உண்மை. அதனால் தான் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு சட்டப்பிரிவு பற்றிய சரியான விளக்கத்தை அறிந்து கொண்டு வருக்கின்றோம்.

அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் 136 மற்றும் 137 ஆகியவற்றுக்கான சரியான விளக்கத்தை அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதை தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ இந்திய தண்டனை சட்டம் 133, 134 மற்றும் 135 ஆகியவற்றுக்கான விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்

IPC Section 136 in Tamil:

தரைப்படை, கடற்படை அல்லது விமானப்படையில் ஒரு அலுவலர் தனது பணியை சரியாக செய்யாமல் மற்றும் தனது ஒழுங்கீனமான நடத்தை காரணமாக பணிகளில் தவறுகளை செய்கிறார் என்பதால் அவர் பணிநீக்கம் செய்யபட்டுள்ளார், என்பதை அறிந்தும் அவருக்கு புகலிடம் அளிப்பது தவறு ஆகும்.

இத்தகைய தவறை செய்பவருக்கு இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.

இதை தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ இந்திய தண்டனை சட்டம் 128,129 மற்றும் 130-க்கான விளக்கம்

IPC Section 137 in Tamil:

எந்தவொரு வணிகக் கப்பலில், இந்திய அரசாங்கத்தின் தரைப்படை, கடற்ப் படை அல்லது விமானப்படையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட வீரரை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறாரோ, அந்தவொரு வணிக கப்பலின் தலைவர் அல்லது அதன் பொறுப்பிலிருக்கும் நபருக்கு அவர் மறைத்து வைக்கபட்டிருக்கும் தகவல் தெரியவில்லை என்றாலும் அவர் குற்றம் புரிந்தவர் ஆகின்றார்.

அதனால் அவர் ரூபாய் ஐநூறுக்கு மிகாத அபராதத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்.

இதை தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ இந்திய தண்டனை சட்டம் 121,122 மற்றும் 123-க்கான விளக்கம்

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now