பயங்கரமான ஆயுதங்களை பயன்படுத்தினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்..!

Advertisement

IPC Section 144 and 145 in Tamil

இன்றைய பதிவு இந்தியனாக பிறந்த அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இந்தியாவில் பிறந்த நாம் அனைவருக்குமே இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் பற்றிய சரியான புரிதல் இருக்கிறதா என்றால் நம்மில் பலருக்கும் கிடையாது. அதனால் தான் உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் ஒவ்வொரு வகையான தண்டனை சட்ட பிரிவுகளின் விளக்கத்தினை பொதுநலம். காம் பதிவில் கூறப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 144 மற்றும் 145 பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த சட்ட பிரிவு கூறப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பற்றிய முழு விரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

சட்ட விரோதமான கூட்டம் கூட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்

IPC Section 144 in Tamil:

சட்ட விரோதமாக கூட்டப்பட்டுள்ள கூட்டத்தில் பயங்கரமான ஆயுதங்கள் அல்லது மரணத்தை விளைவிக்கத்தக்க ஆயுதங்களை எடுத்து செல்வது குற்றமாகும்.

அப்படி பயங்கரமான ஆயுதங்கள் அல்லது மரணத்தை விளைவிக்கத்தக்க ஆயுதங்களுடன் செல்வோருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் மற்றும் அபராதம் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இந்திய அரசு படை வீரரின் சீருடையை தவறான நோக்கத்தில் அணிந்தால் இந்த தண்டனை தான் கிடைக்கும்

IPC Section 145 in Tamil:

சட்ட விரோதமாகக் கூடியுள்ள கூட்டத்தைக் கலந்து செல்லுமாறு போலீசார் உத்தரவிடுவார்கள். அப்படி போலீசார் உத்தரவிட்ட பிறகும் கூட்டத்தை கலைக்காமல் இருப்பது குற்றமாகும்.

இப்படிப்பட்ட சட்ட விரோதமான கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் மற்றும் அபராதம் அல்லது சிறைக்காவலுடன் கூடிய அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இந்திய தண்டனை சட்டம் 136 மற்றும் 137 ஆகியவற்றுக்கான சரியான விளக்கத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 

 

Advertisement