சட்ட விரோதமான கூட்டம் கூட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்..!

Advertisement

IPC Section 157 and 158 in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் பற்றிய சரியான புரிதல் இருக்கிறதா என்றால் நம்மில் பலருக்கும் கிடையாது. அதனால் தான் உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் ஒவ்வொரு வகையான தண்டனை சட்ட பிரிவுகளின் விளக்கத்தினை பொதுநலம். காம் பதிவில் கூறப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 157 மற்றும் 158 பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து எந்தெந்த குற்றங்களுக்கு இந்த சட்டப்பிரிவில் கூறப்பட்டுள்ள தண்டனைகள் கிடைக்கும் என்பதை பற்றிய முழுவிரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒  நம்பிக்கை மோசடி செய்தால் சட்டத்தில் என்ன தண்டனை தெரியுமா

IPC Section 157 in Tamil:

சட்ட விரோதமாக ஒரு கூட்டத்துக்குப்புகலிடம் கொடுப்பது குற்றமாகும். அப்படி சட்ட விரோதமான கூட்டத்திற்கு என்று அழைக்கப்பட்டவர்கள் அல்லது சட்ட விரோதமான கூட்டத்தை கூட்டியவர்கள் என்று அறிந்த பின்பும் அவர்களை வரவேற்பதும், தம்முடைய இடத்தில் அவர்கள் ஒன்று சேர்வதற்கு அனுமதிப்பதும், அவர்களுக்குப் புகலிடம் அளிப்பதும் குற்றமாகும்.

இந்தக் குற்றத்திற்கு இந்திய தண்டனை சட்ட பிரிவு 157-ன் படி ஆறு மாதங்கள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

இதையும் படியுங்கள்=> தண்டனை சட்டம் 141, 142 மற்றும் 143-ல் சொல்லப்பட்டுள்ள குற்றங்கள் பற்றி தெரியுமா

IPC Section 158 in Tamil:

ஒரு சட்டவிரோதமான கும்பல் அல்லது கலகத்தில் பங்கு கொள்வதற்கு கூலிக்கு அமர்த்தப்படல் அல்லது கூலிக்கு அமர்த்த முயற்சிப்பது குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு இந்திய தண்டனை சட்ட பிரிவு 158-ன் படி ஆறு மாதங்கள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

மேலும் அவ்வாறு கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் போது ஏதாவதொரு அபாயகரமான ஆயுதத்துடன் அல்லது மரணத்தை அநேகமாக விளைவிக்கும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தலாமோ அதனை ஏந்தி செல்லுதல் அல்லது ஆயுதத்துடன் செல்வதற்கு முனைந்தால் அது குற்றமாகும்.

இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கபடக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டனையாக விதிக்கப்படும்.

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 

 

Advertisement