IPC Section 159 to 162 in Tamil
பொதுவாக இந்திய நாட்டில் பிறந்த அனைவருமே பல விஷயங்களை நினைத்து பெருமிதம் கொள்வோம். அப்படி நாம் பெருமிதம் கொள்ளும் பல விஷயங்களில் ஒன்று தான் நமது இந்திய நாட்டின் தண்டனை சட்டம். இதனை பற்றி நாம் பல இடத்தில் பெருமிதமாக பேசி இருப்போம். ஆனால் அப்படி நாம் பெருமையாக பேசும் இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள அனைத்து சட்ட பிரிவுகள் பற்றிய சரியான புரிதல் உள்ளதா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு சட்ட பிரிவு பற்றிய சரியான விளக்கத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சட்ட பிரிவுகள் 159,160 மற்றும் 161 பற்றிய சரியான விளக்கத்தை பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஒருவரை மிரட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்..!
IPC Section 159 and 160 in Tamil:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பொது இடத்தில் சண்டையிட்டு இதனால் பொது இடத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் போது, இந்திய சட்ட பிரிவு 159-ன் படி குற்றம் புரிந்தவராகிறார்.
மேலே குறிப்பிட்டுள்ள குற்றத்தை யார் புரிந்தாலும் அந்த நபருக்கு இந்திய சட்ட பிரிவு 160-ன் படி ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் நூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
IPC Section 161 in Tamil:
இந்த சட்ட பிரிவு அரசு ஊழியர்களுக்கு தண்டனை அளிக்கும் சட்ட பிரிவு ஆகும். அதாவது அரசு ஊழியராக உள்ள ஒருவர் தனது கடமையை செய்வதற்காக தன்னை தேடி வரும் பொது மக்களிடம் இருந்து லஞ்சம் பெறுவது குற்றம் ஆகும்.
இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> இந்திய தண்டனை சட்டம் 383,384 மற்றும் 385-க்கான சரியான விளக்கம்..!
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |