இந்திய தண்டனை சட்டம் 165 மற்றும் 167 பற்றிய தகவல்கள்

indhiya thandanai sattam tamil

இந்திய தண்டனை சட்டம் 165 மற்றும் 167 பற்றிய விளக்கம்

வணக்கம் நண்பர்களே..! நம் இந்திய நாட்டில் எண்ணற்ற சட்டங்கள் இருக்கின்றன. அந்த சட்டங்களை பற்றி முழுமையாக நாம் தெரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அதில் ஒரு நுணியளவாவது கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டும். அத்தகைய இந்திய தண்டனை சட்டங்கள் பிரிவில் இரண்டினை மட்டும் இன்றைய பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். தண்டனை சட்டம் 165 மற்றும் 167-ல் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் என்ன என்பதை பற்றி இன்றைய பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

IPC Section 165 in Tamil:

தண்டனை சட்டம் 165 என்பது ஒரு அரசாங்க அதிகாரி அவரின் கடைமையை செய்யும்போது அதற்கு கைமாறாக மக்களிடம் எந்த விதமான பணமோ அல்லது பொருட்களோ இது மாதிரி எதுவும் வாங்க கூடாது என்று இச்சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

அதுபோல அரசாங்க அதிகாரிகள் அரசுக்கு சார்ந்த பொருட்களை அதிக விலைக்கு விற்றாலோ அல்லது இலவசமாக மற்றவர்களுக்கு கொடுத்தாலோ தண்டனை சட்டம் பிரிவு 165-ன் படி அது குற்றமாகும்.

இத்தகைய குற்றத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354- யின் விளக்கம்

IPC Section 167 in Tamil:

அரசாங்கத்தில் பொதுப்பணியாளராக இருக்கும் ஒரு அதிகாரி மக்களுக்கான சான்றிதழை புதுப்பித்தல், அதில் இருக்கும் பிழையை சரி செய்தல் இன்னும் மற்ற வேலைகளை செய்யும் போது அந்த நபரின் மேல் உள்ள கோபத்தால் சான்றிதழில் தெரிந்தே எந்த விதமான தவறுகள் செய்தாலும் தண்டனை சட்டம் 167-ன் படி அது குற்றமாகும்.

இத்தகைய குற்றத்திற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டு கால சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று IPC Section 167-ல் சொல்லப்பட்டு இருக்கிறது.

506 2 IPC in Tamil
IPC 376 in Tamil

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.Com