இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 304 பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

சட்டம் 302 மற்றும் 304

தண்டனை சட்டம் 302 மற்றும் 304 பற்றிய விளக்கம்..!

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நண்பர்களே… இன்று நம் பதிவில் இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 304 பற்றிய தகவல்களை தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் சட்டம் தெரிந்திருக்க வேண்டும். அதுபோல இந்த பதிவின் மூலம் நீங்கள் எத்தனையோ தண்டனை சட்டங்களை பற்றி படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். அந்த வகையில் இன்று 302 மற்றும் 304 தண்டனை சட்டத்தை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தண்டனை சட்டம் 302:

  • இந்த இந்திய தண்டனை சட்டம்  302 பிரிவு படி. ஒரு உயிரை இந்த உலகத்தைவிட்டு பிரித்த கொலையாளிக்கு தண்டனை வழங்கும் நோக்கத்திற்காக இந்த சட்டமானது கொண்டுவரப்பட்டுள்ளது.
  • 302 இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் ஒருவன் ஒரு நபரை கொலை செய்தால் அவனுக்கு இந்த சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும்.
  •  இந்த 302 சட்டத்தில் கொடுக்கப்படும் தண்டனை என்னவென்றால், கொலை செய்பவர்க்கு மரண தண்டனை வழங்கப்படும்.
  • அதுமட்டுமின்றி கொலை செய்த கொலையாளிக்கு தூக்கு தண்டனை அல்லது அவனுடைய வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்கப்படும். மேலும் அபாரதங்களும் விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377-யின் விளக்கம்

தண்டனை சட்டம் 304:

  • இந்த தண்டனை சட்டமும் 302 சட்டத்தை அடிப்படையாக வைத்து கொண்டு வரப்பட்டது.
  • கொலை குற்றம் புரிந்தவனுக்கு இந்த சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும்.
  • மரணத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒருவன் கொலை குற்றம் செய்கிறார்களோ அவர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.
  • ஒருவரை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முயற்சி செய்து அப்போது அவர் மரணமடைந்தால் கொலை குற்றம் செய்தவன் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவான்.
  • கொலை குற்றம் செய்தவனுக்கு இந்த 304 சட்டத்தின் அடிப்படையில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். மேலும், அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com