IPC Section 337 and 338 in Tamil
நமது இந்திய தண்டனை சட்டம் பற்றிய சரியான புரிதல் நம்மிடம் உள்ளதா..? என்றால் இல்லை என்பதே நம்மில் பலரின் பதிலாக இருக்கும். அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சட்ட பிரிவு பற்றிய சரியான விளக்கத்தை அறிந்துக் கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 337 மற்றும் 338-க்கான சரியான விளக்கத்தை பற்றி அறிந்துக் கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=> இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 334 மற்றும் 336-க்கான விளக்கம்
IPC Section 337 in Tamil:
ஒருவரின் உயிருக்கு அபாயத்தை உண்டாகக்கூடிய அல்லது பிறருடைய பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எந்த ஒரு செயலையாவது, அசட்டு துணிச்சலுடன் அல்லது கவனக்குறைவாக யாராவது ஒருவர் புரிந்து அதனால் யாருக்காவது காயம் ஏற்பட்டால். அந்த செயலை புரிந்த நபருக்கு 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> சட்ட விரோதமான கூட்டம் கூட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்
IPC Section 338 in Tamil:
ஓருவரின் உயிருக்கு அபாயத்தை உண்டாக்கும் விதத்தில் அல்லது ஓருவருடைய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் முறையில் யாராவது ஒருவரால் அசட்டுத் துணிச்சலுடன் அல்லது கவனக்குறைவாக செய்யப்படும், ஒரு செயலினால் யாருக்காவது கடுங்காயம் ஏற்பட்டால்.
அந்தச் செயலைப்புரிந்த நபருக்கு 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> போலி ஆவணம் தயாரித்தால் இந்த தண்டனை தான் கிடைக்கும்
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |