இந்திய தண்டனை சட்டம் 378 மற்றும் 379-ன் உண்மை என்ன தெரியுமா..?

ipc section 379 in tamil

தண்டனை சட்டம் 378 மற்றும் 379 பற்றிய விளக்கம் 

வணக்கம் நண்பர்களே..! உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் ஒவ்வொரு வகையான தண்டனை சட்ட பிரிவுகளின் விளக்கத்தினை பொதுநலம். காம் பதிவில் கூறப்பட்டு இருக்கின்றன. அந்த பதிவுகள் அனைத்தும் நாம் சட்டங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு மிகவும் உதவியானதாக இருக்கிறது. அத்தகைய வரிசையில் இன்று நாம் தெரிந்து கொள்ளப்போகும் இந்திய தண்டனை சட்டம் என்னவென்றால் IPC Section 378 மற்றும் 379 ஆகும். மேலும் அந்த சட்டங்களின் சொல்லப்பட்டுள்ள தண்டனைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள்⇒ இந்திய தண்டனை சட்டம் பிரிவு 116 பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

IPC Section 378 in Tamil:

இந்திய தண்டனை சட்டம் 378 என்பது ஒருவர் தனக்கு சொந்தமாக வைத்து இருக்கும் பொருளை அவருடைய விருப்பம் இல்லாமல் மற்றொருவர் அந்த பொருளை எடுத்தால் அது திருட்டு என்று சொல்லப்படுகிறது.

ஒருவர் வைத்து இருக்கும் சொத்துக்கள் அல்லது பொருட்கள் அவரின் சம்மதம் பெறாமல் அவருக்கு நெருக்கமாக இருக்கும் மற்றொவரின் விருப்பப்படி சொத்துக்கள் அல்லது பொருட்களை எடுத்துக்கொண்டால் அது தண்டனை சட்டம் 378 கீழ் குற்றமாகும்.

அதுபோல அசையா பொருட்கள் என்று பூமியுடன் சில பொருட்கள் இணைந்து இருக்கும். அந்த பொருட்களை யாராலும் எளிதில் பூமியிடம் இருந்து பிரித்து எடுக்க முடியாது. ஒரு வேளை நீங்கள் அந்த அசையா பொருட்களை பூமியிடம் இருந்து பிரித்து எடுத்தால் அது திருட்டாகும் என்று IPC Section 378– ன் படி கூறப்படுகிறது.

அரசு சார்ந்த சில பொருட்களை விதிமுறைகளின் படி பார்வைக்கு வைத்து இருப்பார்கள். அந்த பொருட்களை விதிகளை மீறி யாருடைய அனுமதி இல்லாமல் எடுத்தால் அது சட்டப்படி திருட்டாகும் என்று IPC Section 378-ல் கூறப்படுகிறது.

மேலே சொல்லப்பட்டுள்ள குற்றத்திக்கான தண்டனைகள் IPC Section 379– ன் படி வழங்கப்படும்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323-யின் விளக்கம்

IPC Section 379 in Tamil:

எந்த விதமான திருட்டாக இருந்தலும் அந்த திருட்டினை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை சட்டம் 379– ன் படி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அதற்கான தக்க அபராதம் விதிக்கப்படும்.

திருட்டுகள் சில நேரத்தில் பெரிதாக இருக்கும் போது அபாரதத்துடன் கூடிய மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

இதையும் படியுங்கள் 👇 👇 👇

506 2 IPC in Tamil
IPC 376 in Tamil

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.Com