திருடினால் இந்த தண்டனைகள் தான் கிடைக்கும்..!

IPC Section 380 to 382 in Tamil

IPC Section 380 to 382 in Tamil

நம்மை பாதுகாக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்திய தண்டனை சட்டம் பற்றிய சரியான புரிதல் நம்மில் பலருக்கும் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. அதனால் தான் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு இந்திய தண்டனை சட்ட பிரிவு பற்றிய தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய பதிவில் திருடினால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பற்றிய தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்ககள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 337 மற்றும் 338-க்கான விளக்கம்..!

IPC Section 380 in Tamil:

பொதுவாக ஒருவரிடம் உள்ள பொருட்கள் அல்லது சொத்துக்களை அவருக்கே தெரியாமல் திருடுவது அல்லது பரித்து கொள்வது தவறு ஆகும்.

அவ்வாறு திருடுபவர் அல்லது பரித்து கொள்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

IPC Section 381 in Tamil:

ஒருவரிடம் பணியாளராக பணிபுரியும் ஒரு நபர் தம்முடைய முதலாளியின் பொருளை அவருக்கே தெரியாமல் திருடினால் அல்லது பரித்து கொள்வது தவறு ஆகும்.

அவ்வாறு திருடுபவர் அல்லது பரித்து  கொள்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 382 IPC in Tamil:

ஒருவரிடம் உள்ள பொருளை அல்லது சொத்துக்களை திருடுவதற்காக அல்லது திருடியபின் பிடிபடாமல் தப்பி செல்வதற்காக மரணம் அல்லது காயத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்தி அவரை மிரட்டுவது  அல்லது காயத்தை ஏற்படுத்துவது தவறு ஆகும்.

அவ்வாறு மிரட்டுபவர் அல்லது காயத்தை ஏற்படுத்துபவருக்கு 10 ஆண்டுகள் வரையில் கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> சட்ட விரோதமான கூட்டம் கூட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்..!

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law