இந்திய தண்டனை சட்டம் 383,384 மற்றும் 385-க்கான சரியான விளக்கம்..!

Advertisement

IPC Section 383 to 385 in Tamil

பொதுவாக நமக்கு ஒரு பிரச்சனை என்றால் நம்மை பாதுகாப்பதற்காக உதவும் நமது இந்திய தண்டனை சட்டம் பற்றிய சரியான புரிதல் நாம் அனைவரிடமும் இல்லை. அதனால் தான் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு சட்ட பிரிவு பற்றி விளக்கத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் மூலம் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 383, 384 மற்றும் 385 ஆகியவற்றிக்கான சரியான விளக்கத்தை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து 383, 384 மற்றும் 385 சட்டப் பிரிவுகளின் மூலம் எந்தெந்த குற்றங்களுக்கு என்ன தண்டனை என்று அறிந்து  கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> திருடினால் இந்த தண்டனைகள் தான் கிடைக்கும்

IPC Section 383 in Tamil:

ஒருவரிடம் உள்ள பணம், சொத்து அல்லது பொருட்களை அவரை அச்சுறுத்தி அல்லது மிரட்டி பறித்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர் இந்த பிரிவின்படி குற்றம் புரிந்தவர் என்று அறியப்படுகிறார்.

உதாரணமாக இராமசாமி என்பவரிடம் பாலன் பணம் வேண்டும் என்று ராமசாமியை மிரட்டுகிறான். தனக்கு பணம் அளிக்கா விட்டால் இராமசாமியைப் பற்றி அவதூறான ஒரு செய்தியை வெளியிடுவேன் என்று பாலன் மிரட்டுகிறான். அதன் மூலம் இராமசாமியை தனக்கு பணம் கொடுக்குமாறு தூண்டுகிறான் அல்லது மிரட்டுகிறான். எனவே பாலன் அச்சுறுதிப் பொருள் பறிப்பது குற்றமாகும்.

IPC Section 384 in Tamil:

ஒருவரிடம் உள்ள பணத்தை பறிப்பவர் யாராக இருந்தாலும் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

IPC Section 385 in Tamil:

ஒருவரிடம் உள்ள பணத்தை மிரட்டி பறிப்பதற்காக அவரை காயப்படுத்துவது அல்லது காயப்படுத்து விடுவேன் என்று மிரட்டி அச்சுறுத்துபவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 337 மற்றும் 338-க்கான விளக்கம்

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 

 

Advertisement