ஒருவரை மிரட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்..!

Advertisement

IPC Section 386 and 387 in Tamil

நம்மை பாதுகாப்பதற்காகவும் நம்மை அச்சுறுத்துபவர்களுக்கும் சிறந்த தண்டனை அளிப்பதற்காக தான் இந்திய தண்டனை சட்டம் உருவாக்கபட்டுள்ளது. ஆனால் நாம் அனைவருக்குமே இந்திய தண்டனை சட்டம் பற்றிய சரியான புரிதல் இல்லை என்பது தான் உண்மை. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு சட்டப்பிரிவு பற்றிய சரியான விளக்கத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இந்த பதிவில் இந்திய சட்ட பிரிவுகள் 386 மற்றும் 387 பற்றிய சரியான விளக்கத்தை பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> இந்திய தண்டனை சட்டம் 383,384 மற்றும் 385-க்கான சரியான விளக்கம்

IPC Section 386 in Tamil:

யாரேனும் ஒரு நபரை மரண பயத்திற்கு உள்ளாக்கி அல்லது அந்த நபருக்கு அல்லது அவரை சார்ந்த வேறு எவருக்கும் கடுமையான காயத்தை ஏற்படுத்துவதன் மூலம் மிரட்டி பணம் பறிப்பது குற்றமாகும்.

அப்படி மற்றவரை மிரட்டியோ அல்லது காயப்படுத்தியோ பணம் பறிப்பவருக்கு பத்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

IPC Section 387 in Tamil:

மிரட்டி பணம் பறிப்பதற்காக யாரேனும் ஒரு நபரை மரண பயத்திற்கு உள்ளாக்கி அல்லது அந்த நபருக்கு அல்லது அவரை சார்ந்த வேறு எவருக்கும் கடுமையான காயத்தை ஏற்படுத்த முயற்சிப்பது குற்றமாகும்.

இந்த குற்றத்தை செய்பவருக்கு ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> திருடினால் இந்த தண்டனைகள் தான் கிடைக்கும்

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement