போலி ஆவணம் தயாரித்தால் இந்த தண்டனை தான் கிடைக்கும்..!

Ipc Section 468 and 471 in Tamil

Ipc Section 468 and 471 in Tamil

நமது பதிவின் மூலம் தினமும் ஒரு இந்திய தண்டனை சட்ட பிரிவு பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் ஒரு முக்கியமான மற்றும் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒரு சட்டமான இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 468 மற்றும் 471 பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.

இந்த சட்டப்பிரிவுகள் எந்த குற்றத்திற்காக விதிக்கபடுகிறது மற்றும் இந்த சட்டத்தின் மூலம் என்ன தண்டனை கிடைக்கும் போன்ற தகவல்களை  முழுதாக இந்த பதிவின் மூலம் அறிந்துகொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

இதையும் படித்து பாருங்கள்=>சட்ட விரோதமான கூட்டம் கூட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்..!

Ipc Section 468 in Tamil:

பொய்யாக ஓர் ஆவணத்தை உருவாக்கி அதனை பயன்படுத்தி ஒருவரை வஞ்சிக்க அல்லது தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பொய்யான ஆவணத்தை உருவாக்குவது குற்றமாகும்.

அப்படி பொய்யான ஆவணத்தை உருவாக்குபவர்களுக்கு இந்திய தண்டனை சட்ட பிரிவு 468-டின் படி 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.

இதையும் படித்து பாருங்கள்=>நம்பிக்கை மோசடி செய்தால் சட்டத்தில் என்ன தண்டனை தெரியுமா..?

Ipc Section 471 in Tamil:

பொய்யாக ஓர் ஆவணத்தை உருவாக்கி அது பொய்யான ஆவணம் என்று அறிந்திருந்தும் நேர்மையின்றி அல்லது சட்ட விரோதமாக அதனை உண்மையான ஆவணம் என்று பயன்படுத்துவோரும் குற்றமாக கருதப்படுகிறது.

அப்படி பொய்யாக ஓர் ஆவணத்தை பயன்படுத்தியவர் மற்றும் அந்த பொய்யான ஆவணத்தை உருவாக்கியவர்க்கு இந்திய தண்டனை சட்ட பிரிவு 471-ன் படி உரிய தண்டனை விதிக்கப்படும்.

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law