ஜீவனாம்சம் என்றால் என்ன.? ஜீவனாம்சம் கோர என்ன தகுதி.?

Advertisement

ஜீவனாம்சம் என்றால் என்ன.? | Jeevanamsam Meaning Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஜீவனாம்சம் (Jeevanamsam Law in Tamil) என்றால் என்ன.? ஜீவனாம்சம் கோர என்ன தகுதி வேண்டும் என்பதையும் பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஜீவனாம்சம் என்ற வார்த்தையை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், ஜீவனாம்சம் என்றால் என்ன என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதனால், ஜீவனாம்சம் பற்றி நாம் அனைவருமே தெரிந்துகொள்ள விரும்புவோம். அந்த வகையில் நீங்கள் ஜீவனாம்சம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள தன்னை காப்பாறவேண்டியவரும் கைவிட்ட நிலையில் இருக்கும் ஒரு இந்தியக் குடிமகனுக்கு நன்மை அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டதுதான் ஜீவனாம்சம். அதனை பற்றி விவரமாக பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

விவாகரத்து செய்ய தேவையான ஆவணங்கள்

Jeevanamsam in Tamil Meaning:

ஜீவனாம்சம் என்றால் என்ன

தன் வாழ்க்கையே தானே பராமரித்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும் ஒருவர், தன்னை பராமரித்துக்கொள்ள தேவையான தொகையை நீதிமன்ற கட்டளையின்படி பெரும் ஈட்டுத் தொகை ஆகும்.

தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்களுக்கும், தன்னை பராமரிக்க வேண்டியவரும் கைவிட்ட நிலையில் இருக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு இந்திய குற்றவியல் சட்டத்தின் (Criminal Procedure Code) பிரிவு 125, 126, 127 மற்றும் 128 -இன் படி பெறப்படும் தொகையே ஜீவனாம்சம் ஆகும். ஜீவனாம்சம் கோருவதற்கு தகுதிகள் உள்ளது. அவை பின்வருமாறு:

What is The Eligibility to Claim Alimony in Tamil:

  • தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத தாய் மற்றும் தந்தை.
  • தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாத மனைவி.
  • தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாத கணவன்.
  • உடலளவிலோ, மனத்தளவிலோ பாதிக்கப்பட்டிருக்கும் வயது வந்த சட்டப்பூர்வமான அல்லது சட்டம் அங்கீகரிக்காத ஒருவரின் மகன் அல்லது மகள்
  • தன் வாழ்க்கையை பராமரித்துக் கொள்ள இயலாத சட்டம் அங்கீகரிக்கும் மற்றும் சட்டம் அங்கீகரிக்காத மைனர் குழந்தைகள்.
  • மேலும், கணவரால் விவாகரத்து செய்யப்பட்ட பெண் மறுமணம் செய்யாத பட்சத்திலும், எந்தவிதமான நிரந்தர ஜீவனாம்சம் பெறாத பட்சத்திலும், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள எந்தவிதமான வருமானமும் இல்லாத பட்சத்திலும் இந்தச் சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம் கோர இயலும்.
  • மேற்கூறிய இவர்கள் அனைவரும் தன்னுடைய கணவர், தகப்பன் மற்றும் பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கோர இந்தப் பிரிவு வழிவகை செய்கிறது.

Jeevanamsam in English Word:

ஜீவனாம்சம் என்பதை ஆங்கிலத்தில் Alimony என்று கூறுவார்கள்.

மாற்றப்பட்ட புதிய 3 குற்றவியல் சட்டங்கள்.! பழைய சட்டத்திற்கும் புதிய சட்டத்திற்கும் என்ன வித்தியாசம்.!

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement