கடுங்காவல் தண்டனை என்றால் என்ன..? | Kadunkaval Thandanai Enral Enna

Advertisement

Kadunkaval Thandanai Enral Enna

பதிவை தெரிந்துகொள்ள போகும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்..! பொதுவாக நாம் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கும் தண்டனை வழங்குவது உண்டு.  அதாவது பள்ளியில் நாம் செய்யும் தவறுகளுக்கு ஆசிரியர்கள் அதற்கான தண்டனை கொடுப்பார்கள். அதுபோல் நாம் செய்யும் குற்றத்திற்கு அரசு நமக்கு தண்டனை அளிக்கும். ஆனால் அந்த தண்டனையை ஏற்றுக்கொண்டு செய்த நிலை மாறி இப்போது அதனை செய்யாமல் இருக்க நிறைய வழிகள் வந்துவிட்டது.

பொதுவாக சிறை தண்டனையில் நிறைய வகைகள் உள்ளது. அதாவது நாம் செய்யும் குற்றங்களை பொருத்து மாறுபடும். சிலருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும். சிலருக்கு 6 மாதம் சிறை தண்டனை கிடைக்கும். ஆனால் இதில் இருக்கும் கேள்வி என்னவென்றால் சிலருக்கு 6 மாதம் கடுக்காவல் தண்டனை என்று தீர்ப்பு கொடுப்பார்கள். இது என்ன கடுங்காவல் தண்டனை..? அப்படி என்றால் என்ன என்பதை பற்றி தெளிவாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Kadunkaval Thandanai Enral Enna:

கடுங்காவல் தண்டனையை தூக்குத் தண்டனையை விட அதிகமாக பார்க்கிறார்கள். இந்த தண்டனையை இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் குற்றம் செய்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.

திருடினால் இந்த தண்டனைகள் தான் கிடைக்கும்

கடுங்காவல் தண்டனை என்பது 10 வருடம் சிறைத்தண்டனை. அதேபோல் 20 வருடம் சிறை தண்டனையாக கூட இருக்கலாம். இந்த தண்டனைகள் குற்றங்களை பொறுத்து மாறுபடும்.

இது பாலியல், கொலை போன்ற குற்றம் செய்பவர்களுக்கு அதிகம் வழங்கப்படுகிறது. குற்றம் செய்பவர்களுக்கு பயன்படும் அடிப்படையில் தான் இந்த தண்டனைகள் இருக்க வேண்டுமே தவிர, உணர்ச்சி அடிப்படையில் இருக்கக் கூடாது.

 இந்த கடுங்காவல் தண்டனை என்பது குற்றவாளிகள் சிறையில் கடுமையான வேலைகளைச் செய்து அவர்களின் சிறைக்காலத்தை கழிக்கவேண்டும். அதேபோல் ஆயுள் தண்டனையும் கடுங்காவல் தண்டனை ஆகும். இந்த தண்டனையை மஹாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில், இதை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

தண்டனை சட்டம் 131 மற்றும் 132-ல் எந்த குற்றங்களுக்கான தண்டனை சொல்லப்படுகிறது தெரியுமா

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement