உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உங்களுக்கு கிடைக்கிறதா? இல்லை என்றால் இந்த பதிவை முழுமையாக பாருங்கள் …..

Advertisement

குறைந்த பட்ச ஊதிய சட்டம் 1948

வணக்கம் நண்பர்களே, இன்று நாம் தெரிந்து கொள்ளப்போவது நமது அனைவருக்கும் தெரிந்து இருக்க வேண்டிய சட்டம் தான். நம்மில் பாதி பேர்க்கு நமக்கு வழங்கப்படும் சம்பளத்தை பற்றியும், வேலை செய்யும் நேரத்தை பற்றியும் தான் தெரியும். ஆனால் உங்களது வேலைக்கு தகுந்த ஊதியம் உங்களுக்கு வழங்கப்படுகிறதா என்று தெரியுமா…சரி உங்கள் சம்பளம் உங்கள் உழைப்புக்கு கம்மி என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் மேல் அதிகாரியிடம் முறையீடுவீர்கள். ஆனால் அதற்கான பதில் உங்களுக்கு கிடைக்குமா இல்லை சம்பள உயர்வு இருக்குமா….அனைத்திற்கும் பதில் கோள்விக் குறிதான். உங்கள் குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா. அதை பற்றி தான் சொல்லுகிறது. இந்திய அரசின், குறைந்த பட்ச ஊதிய சட்டம் 1948. நாம் இன்று பார்க்க போவதும் இந்த சட்டத்தை பற்றித்தான். வாருங்கள் இந்த சட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அதிகம் பங்கு பெறுவார்கள் கடைநிலை  தொழிலார்கள் தான். ஆம் நம் நாட்டில் 92 சதவீதத்தினர் கடைநிலை ஊழியர்கள் ஆகிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான். இந்த தொழிலாளர்கர்களின் ஊதியம் என்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. அவர்களின் கோரிக்கைகளை கூறுவதற்கு ஒரு முறையான அமைப்பு இல்லை. அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்பவர்கள் கட்டடத்தொழில் செய்ப்பவர்கள், விவசாய கூலிகள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை அனைவரையுமே சாரும்.

இந்தியாவில் பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள்

தொழிலாளர்கள் சட்டம் 

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக உருவாக்க பட்ட சட்டம் தான் தொழிலாளர்கள் சட்டம். இந்தியாவில் உள்ள தொழிலாளர் சட்டங்களில், தொழில் தகராறு சட்டம், போனஸ் வழங்குதல் சட்டம், தொழிலாளர் இழப்பீடு சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், போன்ற பல சட்டங்கள் உள்ளது. இந்த சட்டங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் தொழிலாளர்களின் நலன் போன்றவற்றை உள்ளடக்கியது ஆகும்.

minimum-wages-act-1948

குறைந்தபட்ச ஊதிய சட்டம், 1948

Minimum Wages Act of 1948: தொழிலாளர்களின் ஊதியம் என்பது  அவர்களின் அடிப்படை கோரிக்கை. அந்த ஊதியத்தை முறைபடுத்த வந்தது தான் குறைந்த பட்ச ஊதிய சட்டம்.

ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது ஒருவர் அவரின் வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கும், அவரது பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும் மிக முக்கியமாக தேவைப்படுகிறது. இந்தியாவில் முதலாளிகள் தொழிலாளிகளுக்கு முறையான ஊதியம் வழங்காமல் அல்லது தாமதப்படுத்தி வழங்கி, தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதை தடுக்கவும், தொழிலாளர்களுக்கான உரிய ஊதியம் கொடுக்கவும் கொண்டுவரப்பட்ட சட்டம் தான் இந்தியா அரசின் குறைந்த பட்ச ஊதிய சட்டம் 1948.

சொத்து வாங்கும் போதும் சரி, விற்கும் போது சரி வருமான வரி துறை விதிகளை மீறிடாதீங்க..

இந்த சட்டம், ஒரே வேலையைச் செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் சமமான ஊதியம். இந்த சட்டத்தின் முன் ஆண் மற்றும் பெண் அனைவரும் சமமாக கருதப்படுவார்கள். தொழிலாளர்களின் ஒழுக்கமான வாழ்க்கை தரத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டது.

minimum-wages

குறைந்த பட்ச ஊதியம் எவ்வளவு ?

1996-ஆம் ஆண்டு, முதன் முதலாக தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

1998 -ல் ரூபாய் 40 ஆகவும்

1999 ஆம் ஆண்டு முதல் ரூ.45 ஆகவும்

2002 ஆம் ஆண்டு முதல் ரூ.50 ஆகவும்

2004 ஆம் ஆண்டு முதல் ரூ.66 ஆகவும்

2007 ஆம் ஆண்டு முதல் ரூ.80 ஆகவும்

2010 ஆம் ஆண்டு முதல் ரூ.100 ஆகவும்

2011 ஆம் ஆண்டு முதல் ரூ.115 ஆகவும்

2013 ஆம் ஆண்டு முதல் ரூ.137 ஆகவும்

2015 ஆம் ஆண்டு முதல் ரூ.160 ஆகவும்

2017 ஆம் ஆண்டு முதல் ரூ.170 ஆகவும்

2019 ஆம் ஆண்டு ரூ.178 ஆக உயர்த்தப்பட்டது.

2015 ஆம் ஆண்டு 17 சதவீத உயர்வும் , 2017 – ல் 10 சதவீதம் உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியம், 2019 ஆம் ஆண்டு வெறும் 1 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. இது ஒரு சாமானியனின் தேவையை பூர்த்தி செய்யாது.

குறைந்தபட்ச ஊதியச் சட்டம் எங்கு எல்லாம் பயன்படும்.

குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948,  இத்திட்டம் இந்தியா முழுவதும் செயல்படும். ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எந்த துறைக்கும் பொருந்தாது. மாநிலம் சார்ந்த துறைகளை உள்ளடக்கியது.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைத்தபட்ச ஊதியம் ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறையும் மாற்றி, ஊதிய விகிதம் திருத்தப்படும். இந்த ஊதிய விகிதத்தை திருத்த மத்திய அரசு முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் இருவரும் அரசு தரப்பில் இருவரும் மற்றும் சமூக ஆர்வலர் என சரியான கலவையில் குழு அமைத்து ஊதிய விகிதத்தை தீர்மானிக்கும். அந்த குழு செய்யும் ஊதிய திருத்தத்திற்கான மாற்றத்தை அதிகாரபூர்வ அரசிதழில் அறிவிப்பாக அரசு வெளியிடும். அந்த அறிவிப்பு இந்த அறிவிப்பால் யாரேனும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என அறிய வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பில் ஏதேனும் மாற்று கருத்து உள்ளவர்கள் அறிவிப்பு வெளியாகி இரண்டு மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.

பெண்களை இழிவுபடுத்தி பேசினாலோ, சத்தம் போட்டால் இந்த தண்டனை தான்..!

குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் பகுதி 13ன் கீழ்,

அரசு ஒரு சராசரி வேலை நேரத்தை கணக்கில் எடுத்து கொண்டு அதற்குத் தகுந்தவாறு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த சராசரி வேலை நேரத்தில் குறைந்த பட்சம் ஒரு இடைவேளை இருக்க வேண்டும்.

7 நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறையும் அதற்கும் சேர்த்து குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

அவசரமான வேலை அல்லது குறிப்பிட்ட காலத்தில் செய்ய வேண்டிய வேலை , அல்லது அன்றைக்கு முடிக்கப்படாத வேலைகளை தவிர்த்து விடுமுறை நாட்களில் ஒரு தொழிலாளர் வேலை செய்தால் அதற்கு ஓவர்டைம் ஊதியம் தரப்பட வேண்டும்.

சட்டத்தின் பகுதி 15 படி,

ஒரு தொழிலாளர் வேலை நாளாகக் கருதும் நேரத்தை விட குறைவான மணிநேரம் வேலை செய்திருந்தால், அவர் ஒரு நாள் முழுவதும் வேலை செய்ததைப் போல அவர் செய்த வேலைக்கு ஏற்ப ஊதியம் பெற உரிமை உண்டு. இருப்பினும், சில நேரங்களில் அவர் ஒரு முழு நாளின் ஊதியத்தைப் பெற முடியாது.

குறைந்த பட்ச வழங்கத்தவர்களுக்கு தண்டனை 

குறைந்த பட்ச ஊதிய விதி மீறல்களை கண்காணிப்பதற்காக மத்திய அரசும் மாநில அரசும் தொழிலாளர் கண்காணிப்பாளர்களை உபயோகிக்க வேண்டும்.

ஒரு முதலாளி தனது தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை தரவில்லை என்றால், அவருக்கு 6 மாத சிறை வாசம் அல்லது 500 ரூபாய் அபராதம், அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனை விதிக்கப்படும்.

 

இது போன்ற சட்டம் பற்றிய தகவலை தெரிந்துக்கொள்ள இந்த லிங்க் கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளவும். law

 

Advertisement